ஆரணி: ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு செல்லும் அவலம்.! எப்போது தீர்வு?
ஆரணி அருகே சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் நாகநதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்யும் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலங்களை சுமந்து செல்லும் பொதுமக்கள் இந்த நிகழுவு அங்கு தொடர்கதையாக உள்ளது. இதற்க்கு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கமண்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளன்(எ) பிரகாஷ் என்பவர் இன்று விடியற்காலையில் இயற்கை எய்தினார். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால் ஆற்றைக் கடந்து சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் தொடர்ந்து கனமழை காரணமாக மலையின் கீழ் உள்ள செண்பக தோப்பு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளவு 57 அடியை நீர்மட்டம் எட்டியதால் செண்பக தோப்பு அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆரணி கமண்டல நாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் மக்கள்
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் தொடர் மழையின் காரணமாக அணைகள், ஏரிகள் போன்றவைகள் நிரம்பியுள்ளது. இதனால் மழை நீர் நிரம்பி வழிந்தோடுவதால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல வழி இல்லாமல் சடலத்தை சுமந்து சென்று சடலத்துடன் கூடிய பாடையை தண்ணீர் ஓடும் ஆற்றில் இடுப்பளவு தண்ணிர் வழியாக அடுத்த கரைக்கு சுமந்து கொண்டு ஆபத்தான நிலையில் எடுத்து சென்று அடக்கம் செய்யும் நிலைமைக்கு கிராம மக்கள் ஆளாகி வருகின்றனர். சுடுகாடு பாதை முழுவதுமாக ஆற்று சூழப்பட்டு சடலத்தை சுமந்தவாறு ஆபத்தான நிலையில் தண்ணிரில் எடுத்து செல்லும் பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் ஒன்றுகூடி, மாவட்ட நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும் தண்ணிரால் சூழப்பட்ட சுடுகாட்டு பாதையில் பாலம் ஒன்றை கட்டி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில்;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கமண்டலபுர கிராமத்தில் வசிக்கிறோம் எங்கள் கிராமத்தின் பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை இறந்தவர்களின் சடலத்தை நாகநதி ஆற்றில் இறங்கி கொண்டு செல்ல அவலமும் தொடர்கதையாக உள்ளோம். தற்போது கமண்டல நதி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் கமண்டல நதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் சடலத்தை பொதுமக்கள் சுமந்து சென்று சுடுகாட்டில் சடங்கு நடத்தி புதைகிறோம். இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு மயான பாதையை அமைத்து தர வேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.