பேச்சிப்பாறையில் உற்பத்தியாகும் தேனுக்கு குமரி தேன் என பெயர்
பேச்சிப்பாறையில் தேனி மகத்துவ மையம் அமைப்பதற்கு 150 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை அளிக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படும்.
நாகர்கோவிலில் நடந்த தேசிய தேன் கருத்தரங்கில் பேச்சிப்பாறை தேனி மகத்துவம் மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு குமரித்தேன் என பெயர் சூட்டப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலையின் மழை பயிர்கள் துறை சார்பில் இந்து கல்லூரியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி கருத்தரைங்கை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகள் இயற்கையாகவே தேனி வளர்ப்புக்கான மகரந்தத்தை தரக்கூடிய தாவரங்களை கொண்ட சிறப்பு பெற்றுள்ளது. இதன் காரணமாக தேனி வளர்ப்பு ஆயிரத்து தொள்ளாயிரத்தி இருபதாம் ஆண்டு முதல் இங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் தேனி பெட்டிகள் ஏபிஎஸ் செரினா வகை தேனீக்களை வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் தேனீ பெட்டிகள் உற்பத்தி மற்றும் தேன் உற்பத்தி செய்வதில் மார்த்தாண்டம் முன்னோடியாக திகழ்வதாக தெரிவித்த அமைச்சர், பேச்சிப்பாறையில் தேனி மகத்துவ மையம் அமைப்பதற்கு 150 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை அளிக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படும். புதுடெல்லி தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் உதவியாளர் குமரி மாவட்டத்தில் தேனி வளர்ப்புக்கு பெரிய திட்டம் வகுக்கப்படும். குமரி மாவட்டத்தில் தேனி வளர்ப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதால் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தேனி வளர்ப்பாளர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் கருத்து உருவாக்கம் செய்து திட்டமாக அளித்தால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பேச்சிப்பாறையில் உள்ள தேனீ மகத்துவ மையத்தின் உற்பத்தி செய்யப்படும் தேனை குமரித்தேன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி வளர்ப்பு குறித்த கையேட்டை வெளியிட்டனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தனியார் தேனீ வளர்போர் சார்பில் இருந்து தேனியில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்புகளையும் கண்காட்சியையும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோட்டக்கலை வளத்தை பறைசாற்றும் வகையில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்ட கருத்து காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தேசிய தேனி வளர்ப்பு மற்றும் தேனீ இயக்கத்தின் உதவிய ஆணையர் மனோஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்