மேலும் அறிய
Advertisement
உள்ளாட்சித் தேர்தலுக்காக தென்காசியில் சரிபார்க்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்...!
’’தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 நகராட்சிகளை சேர்ந்த பணியாளர்கள் 14 மேஜைகளில் உள்ள 1900 வாக்கு இயந்திரங்களை சரிபார்த்து வருகின்றனர்’’
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த 2016ஆம் ஆண்டே முடிவடைந்தது. இருப்பினும் வார்டு மறுவரை, இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வரையறை செய்வது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்ததாலும், தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களின் உருவாக்கப்பட்டதாலும் உள்ளாட்சித் தேர்தலானது நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவது நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலானது இன்னும் நடத்தப்படாமலேயே உள்ளது.
புதிதாக பிரிக்கப்படுவதற்கு முன்னபாக இருந்த மாவட்டங்களிலும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் எல்லை வரைமுறைகள் சீரமைப்பதில் சிக்கல் இருந்த நிலையில், தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களில் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையிலும் தமிழ்நாடு தெரிவித்திருந்தது
உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுருத்தியிருந்தார். இந்நிலையில் தமிழ் நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த தேர்தல் நடத்துவதற்கு உண்டான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரி பார்க்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணி அனைத்தும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் சாந்தி மேற்பார்வையில் நடந்த இந்த பணியில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 நகராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 14 மேஜைகளில் 1900 வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சமீபத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக செப்டம்பர் 13ஆம் தேதியே கூட்டத்தொடரை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion