பணத்தை மாத்திக் கொடுங்க.. கண்ணீருடன் முதல்வருக்கும், பிரதமருக்கு கடிதம் எழுதிய முதியவர்
எந்த கல்வி அறிவு இல்லை என்பதால் தற்போது தான் மற்றவர்கள் கூறி ஆதார் அட்டை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி முத்துமாரியம்மன் கோவிலை தெருவைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மகன் சங்கரபாண்டியன் (70). இவர் விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை, மேலும் சங்கரபாண்டின் செவித்திறன் அற்றவர் (காது கேட்காது). தனியாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலைக்கு சென்று வந்த சங்கரபாண்டியனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை, கோவில்பட்டியில் வசித்து வரும் சங்கரபாண்டியன் அண்ணன் மகள் வசந்தா என்பவர் தான், அவருடைய வாடகை மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். மேலும் அருகில் குடியிருந்து வருபவர்களும் அவ்வப்போது, சங்கரபாண்டியனுக்கு உணவு வழங்கி உதவி வருகின்றனர்.
ஆரம்பத்தில் தினந்தோறும் வேலைக்கு சென்று வந்த சங்கரபாண்டியன், அதில் கிடைக்கும் கூலியை வீட்டில் எங்காவது ஒளித்து வைப்பது, தேவைப்படும் போதும் அதனை எடுத்து செலவு செய்வதினை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதே போன்று தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தினை வீட்டின் ஒரு பகுதியில் வழக்கம் போல மறைத்து சங்கரபாண்டியன் மறைத்து வைத்ததாக தெரிகிறது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து அந்த பணத்தினை தேடி பார்த்துள்ளார். மேலும் அவர் பணம் வைத்த இடமும் அவருக்கு மறந்துவிட்டதாக தெரிகிறது. பணம் கிடைக்கவில்லை, இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டினை ஒதுங்க வைத்துக்கொண்டு இருக்கும்போது, வீட்டில் இருந்த தண்ணீர் டிரமிற்கு அடியில் இருந்த சைக்கிள் டயரில் இருந்த ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் பணம் இருந்தது தெரியவந்தது.
1000 ரூபாள் தாள் 22ம், 500 ரூபாய் தாள் (பழைய 500 ரூபாய் ) 41 தாள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பணம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியுடன், அதில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டினை எடுத்துக்கொண்டு, அங்குள்ள டீ கடைக்கு சென்று, டீ மற்றும் வடை சாப்பிட்டு வீட்டு அந்த 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்த போது, ஐயா இந்த நோட்டு சொல்லது என்று கூறியதும் முதியவர் சங்கரபாண்டியன் ஏமாற்றமடைந்தது மட்டுமின்றி, தான் வைத்திருந்த 1000 மற்று 500 ரூபாய்யை டீ கடைக்காரரிடம் காண்பித்துள்ளார். இதனை பார்த்த அவர், ஐயா, இந்த நோட்டு 2016-ஆம் ஆண்டு செல்லாது என்று அறிவித்து வீட்டர்கள் என்று தெரிவித்துள்ளார். அது அப்படி எனக்கு தெரியமால் நடந்து விட்டது என்று புலம்பியவாறு சென்ற முதியவர் சங்கரபாண்டியன், தனது அண்ணன் மகளுக்கு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தெரிவித்துள்ளார். அவரது அண்ணன் மகள் வசந்தாவும் கோவில்பட்டியில் இருந்து அந்த பணத்தினை பார்த்து இது செல்லாது என்று கூறியுள்ளார்.
இதையெடுத்து 1000, 500 ரூபாயை யார் மாற்றியது என்று கேட்டுள்ளார், பிரதமர்தான் என்று அருகில் இருப்பவர்கள் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து முதியவர் சங்கரபாண்டியன் அருகில் வசிக்கும் பெண்மணி ஒருவர் உதவியுடன் பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தனக்கு படிப்பறிவு கிடையாது, காதுகளும் கேட்காது. உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தான் உழைத்து சேமித்து வைத்திருந்த பணம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு கிடைத்துள்ளதாகவும், ஆனால் அது தற்பொழுது செல்லாது என்று கூறுகின்றனர். தன்னால் வேலைக்கு போக இயலவில்லை என்றும், எனவே தனக்கு தனது பணத்தினை மாற்றி தருவது மட்டுமின்றி, அரசு உதவிதொகையும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.