நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
இரண்டு குடும்பத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது
நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கண்ணன்குளம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார், பைக் மெக்கானிக் கடை நடத்தி வரும் இவரது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி 20 பவுன் தங்க நகை திருடு போயுள்ளது, இது குறித்து பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரில் தன் வீட்டிற்கு அருகே வாடகைக்கு குடியிருக்கும் ஒரு பெண் தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து அவர்களை ஆள் வைத்து நான் அடித்ததாக என் மீது புகார் கொடுத்தனர். என் மீது பொய் புகார் கொடுத்த அவர்கள் அன்றே கண்ணன் குளத்தை உள்ள தனது வீட்டை காலிசெய்துவிட்டு கூடன்குளம் பகுதிக்கு. வாடகைக்கு குடியேறி விட்டனர். ஆனால் அந்த பெண் தான் நகையை திருடி உள்ளார், அவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவரிடம் விசாரணை செய்ய முடியாது என காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.
பழவூர் காவல் நிலையத்தில் நகை காணமல் போனது தொடர்பாக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வள்ளியூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். ஆனால் தற்போது வரை காணாமல் போன நகையை மீட்டு தரவும், திருடுபோன நகை குறித்த புகார் மீது எந்த முறையான பதிலும் இல்லை எனவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்வகுமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மண்ணென்ணெய் கேனை மீட்டனர். மேலும் செல்வகுமார் தம்பதியினரிடம் புகார் எழுதி வாங்கியதோடு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க அழைத்து செய்தனர்.
அதே போல அம்பாசமுத்திரம் அருகே அடைய கருங்குளத்தை சேர்ந்த முதிய தம்பதியர் தனது சொந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே தனது நிலத்தை முறைப்படி சர்வேயர் மூலம் அளக்க மனு அளித்தும் கடந்த 2 ஆண்டு காலமாக அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதோடு தங்களை அலைகழித்து வருகின்றனர் என கூறி இதனால் மனமுடைந்த முதிய தம்பதியினர் வேறு வழியின்றி தீக்குளிக்கும் முயற்சியோடு ஆட்சியர் அலுவலகம் வந்தனர், இதனை அறிந்த காவல்துறையினர் அவர்கள் பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை செய்து ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தை சேர்ந்தோர் தீக்குளிக்கும் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.