மேலும் அறிய

திருநெல்வேலி இளைஞர்களே! இலவச பயிற்சி & வேலைவாய்ப்பு: IOB வழங்கும் அறிய வாய்ப்பு!

இளைஞர்களை குழுக்களாக அழைத்துச் சென்று சந்தை ஆராய்ச்சிக்காகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்  செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடன்  முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) மூலம், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மகாராஜநகரில் செயல்பட்டு வருகிறது.

திருநெல்வேலி இளைஞர்களே! இலவச பயிற்சி & வேலைவாய்ப்பு: IOB வழங்கும் அறிய வாய்ப்பு!

திருநேல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் தற்போது இப்பயிற்சி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு தொடர்பான 30 நாட்கள் கொண்ட இலவச பயிற்சிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின்போது கூடுதலாக, சுயதொழில் துவங்குதல், பொருத்தமான வேலை வாய்ப்புகளை அடையாளம் காணுதல், வணிகத் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறந்த குணங்களை உருவாக்குதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின்போது பயிற்சி குறித்த செயல் விளக்க வீடியோக்கள், தொழில்துறை உபகரணங்களின் பயன்பாடு, கணினி வகுப்புகள் மற்றும் மென் திறன் பயிற்சி மற்றும் நடைமுறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முறைகள் பின்பற்றப்படுவதுடன் தொடர்புடைய துறையில் நிபுணர்களாக இருக்கும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பயிற்சியின் போது முக்கிய தொழில்துறை நிறுவனங்களுக்கு களப்பயணங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிக்கதைகள் நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இளைஞர்களை குழுக்களாக அழைத்துச் சென்று சந்தை ஆராய்ச்சிக்காகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி இளைஞர்களே! இலவச பயிற்சி & வேலைவாய்ப்பு: IOB வழங்கும் அறிய வாய்ப்பு!

பயிற்சியின் முடிவில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சியை முடித்த இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட உதவும் வகையில், பயிற்சி மைய அதிகாரிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சியை முடித்த பிறகு இளைஞர்களுக்கு சுயதொழிலில் ஈடுபட கடன் உதவி தேவைப்பட்டால், வங்கிகளில் கடன் பெற பயற்சி மைய அதிகாரிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் 100 சதவீதம் செய்முறைப்பயிற்சிகளாக இருக்கும். மேலும் பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு சீருடை, அடையாள அட்டை, தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

திருநெல்வேலி இளைஞர்களே! இலவச பயிற்சி & வேலைவாய்ப்பு: IOB வழங்கும் அறிய வாய்ப்பு!

ஆர்வமுள்ள இளைஞர்கள் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகாராஜநகர் கிளையின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி (A63, 5-வது குறுக்குத் தெரு, மகாராஜநகர், திருநெல்வேலி- 627011.) மையத்தினை அணுகலாம். மேலும் இந்த பயிற்சிகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தினை 75399 38413, 75399 42413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget