திருநெல்வேலி அரசு வேலை: 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க!
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் பணியாற்ற ஓர் அறிய வாய்ப்பு ! உடனே விண்ணப்பியுங்கள்..
அரசு வேலை எதிர்பார்க்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் சூப்ரவைசர், சுகாதார பார்வையாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், கீளினர், தர மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை விபரம் மொத்தம் 8 : மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் 1, டிபி சுகாதார பார்வையாளர் 2 , நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் 2 , டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் 1, தூய்மையாளர் 1, தர மேலாளர் 1,
விண்ணப்ப விபரம் : திருநெல்வேலி மாவட்ட பணியிடங்களுக்கு 01.11.2025 தேதியின்படி, அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் மற்றும் நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் ஆகிய பதவிகளுக்கு 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி : மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு ஆகியவை முடித்திருக்க வேண்டும். கணினி ஆப்ரேட்டர் சான்றிதழ் படிப்பு, 2 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். டிபி சுகாதார பார்வையாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது காசநோய் சுகாதார பார்வையாளர் சான்றிதழ் படிப்பு, கணினி ஆப்ரேஷன் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் பதவிக்கு GNM டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு கணினி அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி பயன்பாட்டில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தூய்மையாளர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். தர மேலாளர் பதவிக்கு எம்பிபிஎஸ், டெட்டல், ஆயுஷ், நர்சிங் அல்லது சமூக அறிவியலில் சார்ந்த பட்டப்படிப்பு ஆகியவை பெற்றிருக்கலாம். மருத்துவமனை நிர்வாகம் அல்லது மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவ நிர்வாக பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு விபரம் : இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய விபரம் : மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் - ரூ.19,800,டிபி சுகாதார பார்வையாளர் - ரூ.18,000, நடுத்தர நிலை சுகாதாரம் வழங்குநர் - ரூ.13,500, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் - ரூ.13,500, தூய்மையாளர் - ரூ.8,500, தர மேலாளர் - ரூ.40,000
விண்ணப்பிப்பது எப்படி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், அடையாள அட்டை (வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்) அனுபவ சான்றிதழ்
தேதி விபரம் : விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26.11.2025 தேதி முதல் விண்ணப்பம் முடிவடையும் நாள் 09.12.2025 வரையில். நேர்காணல் விரைவில் அறிவிக்கப்படும். மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் சேரும் நபர்கள் சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















