நெல்லை: ஏகாந்தலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்டனர்.மேலும் அத்துமீறிநுழைய கூடாது என எச்சரிக்கை விளம்பரபலகையும் வைக்கப்பட்டது.
![நெல்லை: ஏகாந்தலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு Tirunelveli 60 acres of encroached lands belonging to Ekanthalingaswamy temple have been recovered - TNN நெல்லை: ஏகாந்தலிங்கசுவாமி கோயிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/07/d61c0eec7e7408f1546c3290aeba2a451723012317256571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஆழ்வார் திருநகரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலான காந்திஸ்வரம் அருள்மிகு ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பகுதியான காரியாண்டி, திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் திருமலாபுரத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நன்செய் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதோடு குத்தகைதாரர்கள் 4 கோடி ரூபாய் வரை அந்த நிலத்திற்கு வரி பாக்கியும் செலுத்தாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி கடந்த ஆண்டு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 1010 ஏக்கர் நிலங்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அளவீடு செய்த இடத்தில் கல் பதிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்த நிலையில் தற்போது திருநெல்வேலி வருவாய் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆணையிட்டது. அதன்படி நாங்குநேரி வட்டம் காரியாண்டி அடுத்த திருமலாபுரத்தில் அமைந்துள்ள ஏகாந்தலிங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் நன்செய் நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேரடியாக அவ்விடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்டனர்.. மேலும் அத்துமீறி நுழைய கூடாது என எச்சரிக்கை விளம்பர பலகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் எனவும் தெரிகிறது.
கோவில் நிலங்களை மீட்பதற்காக வருவாய் துறையினர் இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)