மேலும் அறிய

திருநெல்வேலி: 1999-ல் தொடங்கிய பகை! 3 பேருக்கு ஆயுள் தண்டனை - பரபரப்பு தீர்ப்பு, நடந்தது என்ன?

குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதம் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பை அருகே வாகைகுளத்தில் கடந்த 1999-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், தொடர்ச்சியாக நடந்த இரண்டு கொலை சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், சபரிமுத்து, பாக்யராஜ், விஜய் ஆகியோர் சேர்ந்து அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 32) என்பவரை முன்னீர்பள்ளம் பகுதியில் கொலை செய்த வழக்கில், திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

திருநெல்வேலி: 1999-ல் தொடங்கிய பகை! 3 பேருக்கு ஆயுள் தண்டனை - பரபரப்பு தீர்ப்பு, நடந்தது என்ன?

குற்றவாளிகளான கிருஷ்ணன் சென்ற வருடம் இயற்கையான முறையில் இறந்த நிலையில், மற்ற குற்றவாளிகளான சவரிமுத்து(37), பாக்யராஜ்(40), சரித்திர பதிவேடு குற்றவாளி விஜய்(31) ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம்  குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதம் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வந்த் அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், முன்னீரபள்ளம் காவல்துறையினர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் (தற்போது தாம்பரம் காவல் ஆணையரகம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி: 1999-ல் தொடங்கிய பகை! 3 பேருக்கு ஆயுள் தண்டனை - பரபரப்பு தீர்ப்பு, நடந்தது என்ன?

2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 18 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 63 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 21 நபர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 24 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 21 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Embed widget