மேலும் அறிய

தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

காற்றாலை  மின்கம்பம் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கோரிக்கை.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடி முள்ளகாட்டில் கடற்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் 1986 ஆம் ஆண்டு 21 காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் 55 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்தை அரசு கண்டுகொள்ளாததை தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி, கயத்தாறு, தாராபுரம் என விரிவடைந்த திட்டம் தற்போது தமிழகத்தில் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ள பகுதிகளில் தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டம், புதூர் வட்டாரத்தில் மேலக்கரந்தை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கடந்த ஆட்சியில் 2019ம் வருடம்  மேலக்கரந்தையில் காற்றாலை மின்கம்பம் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க சுமார் ரூபாய்  முந்நூறு கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழக அரசு தனியார் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

காற்றாலையின் சிறகுகள் குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு இறக்கி வைக்கப்படுகிறது. காற்றாலை கம்பம் மற்றும் உதிரி பாகங்கள் இங்கு கடந்த ஓராண்டுக்குக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலையின் பாகங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பின்னர் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் கப்பலில் கொண்டுசெல்லப்படுகிறது.

தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும் போது, “எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தை சேர்ந்த சுமார் பதிமூன்று கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது தனது உற்பத்தியை செய்துவரும் ஆலை நிர்வாகம் வெளிமாநில இளைஞர்கள், வெளிமாவட்டத்தவர்கள் மூலம் பணியை செய்து வருகிறது. மருந்துக்கு கூட இப்பகுதி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு பறிபோய் உள்ளது. தவிர நிர்வாகம் தனது தொழில் ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. தவிர இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு ஆலை நிர்வாகத்திடம் அணுகினால் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கிறது.

தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

எட்டையபுரம் வட்டம் புதூர் வட்டாரம் முத்துலாபுரம் குறுவட்டங்களில் உள்ள மேலக்கரந்தை, மாசார்பட்டி, மாவில்பட்டி, வெம்பூர், அழகாபுரி, அயன்வடமலாபுரம், முத்துலாபுரம் கீழக்கரந்தை, தாப்பாத்தி, வெளவால் தொத்தி, சக்கிலிபட்டி, நம்பிபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எவ்வித தொழில் வளர்ச்சி இல்லாத பகுதி என்பதால் புதிய தொழில் தொடங்குவோர்க்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அரசின் சலுகைகளை. பெற்றுக் கொண்டு இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்காமல் வஞ்சிப்பது வேதனையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு மேலக்கரந்தை சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget