மேலும் அறிய
Advertisement
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள்.... கேரளாவில் பூக்க துவங்கியது..!
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள் கேரளாவில் பூக்க துவங்கி உள்ளது - கண்களுக்கு விருந்து படைக்கும் இந்த பூக்களை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும்.இதனால் நீலக்குறிஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன. நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதிக்கு புதிய நிறம் கொடுத்து விடுகின்றன. இதனால் நீல நிறத்தில் குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிக்கு நீலகிரி என்றே பெயர் வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. புதர் இனத்தை சேர்ந்த குறிஞ்சி செடிகளில் சுமார் 200 வகை உள்ளது. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலும் 150 வகைகள் இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் நில வகை பகுப்பில் மலையும், மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி திணையாக குறிக்கப்படுகிறது. இதன் மூலம் மலை சார்ந்த நிலத்துக்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையிலான பிணைப்பை காண முடியும்.
மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே குறிஞ்சி செடிகள் வளர்கின்றன. பிரகாசமான அதன் நீல நிற மலர்கள் கோவில் மணிகளின் உருவம் கொண்டவை. கடல் மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் வளரும் இந்த வகை செடிகளின் உயரம் 30 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை இருக்கும். இதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரை கூட வளரும். கேரளா இடுக்கி மாவட்டத்தில் சாந்தன் பாற என்ற பகுதியை அடுத்த தமிழக -கேரள எல்லையான கள்ளிப்பாறை என்ற மலைப்பகுதியில் நீல வண்ண பட்டாடை போர்த்தியது போல் 5 ஏக்கரில் மலை முழுவதுமாக பூத்து குலுங்குகிறது நீலக் குறிஞ்சி பூக்கள்.மூணாறு - தேக்கடி நெடுஞ்சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் உள்பகுதியில் மலைமுகடுகளிள் இடையே இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க முடியும். இங்கே செல்ல சாலை வசதிகள் இல்லாததால் ஆஃப் ரோடு செல்லும் ஜீப் வசதிகள் மட்டுமே உள்ளன . கோவிட் பிரச்சினைகளுக்கும் பின் தற்போது தான் மூணாறில் ஒரளவு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர் .இந்த நிலையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூவான நீலக்குறிச்சி பூக்களும் இங்கு பூத்துள்ளத தெரிந்து கொண்டு,இந்த கண்கொள்ளாக் காட்சியை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த பகுதிகளில் குவியவும் தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion