மேலும் அறிய

தாய் வீடா? மாமியார் வீடா? காதல் தம்பதியிடம் எழுந்த பிரச்சினை! மனைவி எடுத்த விபரீத முடிவு! கணவன் ஷாக்!

மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் இனியவன்(33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே வசிக்கும் செங்கோட்டு வேல் என்பவரது மகள் செளமியா (31) என்பவரை காதலித்து வந்த  நிலையில் கடந்த 7 மாதங்களுங்கு முன் திருமணம் செய்து உள்ளார். இந்த கலிங்கப்பட்டியில் அரசு மருத்துவராக பணியை மேற்கொண்ட இனியவன் தனது மனைவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவேங்கடம் அக்ரகாரம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது மருத்துவர் இனியவனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு வரவே பயிற்சி படிப்புக்கு செல்லும் நேரம் மனைவி இங்கு தனியாக விட்டுச் செல்ல முடியாது என்பதால் தனது அம்மாவுடன் சேலத்தில் இருக்குமாறு  கூறியதாக தெரிகிறது. இதற்கு மனைவி சௌமியா மறுப்பு தெரிவித்த நிலையில் தனது தாய் வீட்டில் விட்டுச் செல்லுமாறு கூறி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் இதே பிரச்சினையில் சௌமியா தனது தாய் வீட்டிற்கு தான் செல்வேன் எனக் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மனைவி சௌமியா கோபத்தில் வீட்டில் உள்ள அறையில் சென்று பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் இனியவன் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அவரும் இரவு வேறு  அறையில் படுத்து உறங்கி விட்டு வழக்கம்போல் காலையில் எழுந்து பார்த்தபோது கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. 

இதையடுத்து இனியவன் மனைவி தூங்கட்டும் என்று பணிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் காலையில் கீழ் வீட்டில் குடியிருப்பவர்கள் சௌமியாவை நீண்ட நேரம் காணாததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் இனியவனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த இனியவன் வீட்டின் கதவை தட்டி பார்த்து திறக்காததால் பின் வாசலை உடைத்து உள்ளே சென்றதாகவும், உள்ளே சென்று பார்த்த போது மனைவி சௌமியா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவரது உடலை கீழே இறக்கி வைத்து விட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அங்கிருந்து தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேங்கடம் காவல்துறையினர் சௌமியாவின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து அதன் பெயரில் இனியவனை தேடினர். அவர் சங்கரன்கோவில் பகுதியில் கைகளில் விஷ ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவேங்கடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget