மேலும் அறிய

தென்காசியில் தனது உதவியாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற திட்டம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளர் - சிக்கியது எப்படி?

தனது அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவரிடமே கண்காணிப்பாளர் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரிய கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திட்டம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவா் சீனிவாசன்(50). மேலும் இதே அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமசுப்பிரமணியன். இவருக்கு நிலுவைத் தொகையாக ரூ.3. லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய் வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் இத்தொகையைப் பெற ரூ.10 ஆயிரம் லஞ்சமாக சீனிவாசன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக ராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் போலீஸ் டிஎஸ்பி.மதியழகன், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளா் தெய்வக்கண்ராஜா, தலைமை காவலா்கள் பிரபு, வேணுகோபால், கணேஷ் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்தனா். மேலும் லஞ்சமாக கேட்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ரசாயனம் தடவி ராமசுப்பிரமணியனிடன் கொடுத்து அனுப்பினர். அப்பணத்தை கொண்டு அவர் சீனிவாசனிடம் கொடுத்ததும் உள்ளே நுழைந்த லஞ்சஒழிப்புத்துறை போலீசாா் சீனிவாசனைக் கையும் களவுமாக பிடித்தனா். தொடா்ந்து இரவு வரை விசாரணையானது நடைபெற்று வருகிறது. தனது அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவரிடமே கண்காணிப்பாளர் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget