மேலும் அறிய

குற்றாலத்தில் பெட்டி பெட்டியாக ஆயில் தடவி பதுக்கி வைக்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் பறிமுதல்

மீண்டும் குற்றாலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலைவாசன் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சபரிமலை சீசன் இறுதி காலம் என்பதால் மகர விளக்கு தரிசனத்திற்கு  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் தவறாமல் குற்றாலத்தில் வந்து புனித நீராடி விட்டு தங்களது வீடுகளுக்கு தேவையான அல்வா, சிப்ஸ், மஸ்கோத் அல்வா, பேரிச்சம்பழம் உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தரமற்ற முறையில் அல்வா மற்றும் மஸ்கோத் அல்வா, பேரிச்சம்பழம், சிப்ஸ் உள்ளிட்டவைகள் தரம் குறைந்து தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது, மேலும் உணவுபாதுகாப்பு துறைக்கு தகவல் சென்றதை தொடர்ந்து பல்வேறு கட்டமாக ஆய்வு செய்தனர்.  அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன், மீன், கலப்பட பதநீர் என தொடர்ச்சியாக சுகாதாரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சோதனைகளை நடத்தியதில் டன் கணக்கில் பேரிச்சம்பழம், இரண்டு டன் மஸ்கோத் அல்வா, ஒரு டன் சிப்ஸ் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து அழித்தார். இந்த நிலையில் மீண்டும் குற்றாலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலைவாசன் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குற்றாலம் பேரருவிக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு பழக்கடை குடோனில் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது அங்கு பெட்டி பெட்டியாக மினரல் ஆயில் தடவப்பட்ட சுமார் 1100 கிலோ பேரிச்சம்பழம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக அவைகளை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி குற்றாலம் - பழைய குற்றாலம் சாலையில் உள்ள குற்றாலம் பேரூராட்சி சொந்தமான உரக்கடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று தரமற்ற பொருட்களை விற்பனை செய்து வருவதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது போன்று உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாத வண்ணம் அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
IND vs SA, T20 World Cup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
IND vs SA, T20 World Cup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
IND vs SA: இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
இதுவரை 12 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் களம்.. 4 முறையே வெற்றி.. இந்திய அணியின் மோசமான சாதனை!
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி!
கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி!
Embed widget