மேலும் அறிய

"காவியின் பலம் கருப்பினால் மறைந்துவிடக்கூடாது" - தமிழிசை செளந்தரராஜன்

எங்குமே இந்தியை திணிக்கவில்லை. காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது - தமிழிசை செளந்தரராஜன்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். வித்யாஜோதி பட்டத்தை வெள்ளமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் வழங்கினார். பட்டம்பெற்ற மாணவிகளுக்கு கேடையம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், "தமிழகத்தில் இந்து தர்மத்தைப்பற்றி பேசுவதும், ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும், பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும். குமரியில் நம் பலத்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். இதே பலம் மற்ற இடங்களிலும் வரவேண்டும். ஆன்மீகம்தான் நம் அடிப்படை. ஆனால், காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது. ஆளுநர் இப்படி பேசலாமா அப்படி என் ஒரு பெரிய கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
 

 
எல்லோரின் தர்மங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் ரம்சானுக்கும், கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்வார், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டார். நீங்கள் தமிழ்நாட்டில்தானே இருக்கிறீர்கள், அந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லவேண்டியதுதானே என நான் கேட்டேன். ஆனால், பக்கத்துவீட்டு அண்ணனுக்கு அது தெரியமாட்டேங்குது. ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்படவேண்டும். ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது நாம் எழுச்சிக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. அவர்கள் கருத்தை ஏன் திணிக்க வேண்டும். நாம் எதாவது பேசினால் இவர்கள் எப்படி பேசலாம் என அம்புக் கணைகளை வீசுகிறார்கள். வேறு யார்பக்கமும் அந்த அம்பு எய்யப்படுவதில்லை.
 
ஆன்மீகத்துக்கும் தமிழுக்கு சம்பந்தமே இல்லை என்றும். தமிழை வேறு யாரோ வளர்த்த்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இல்லை, நீங்களெல்லாம் வளர்ப்பதற்கு முன்னால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆன்மீக தமிழாக வளர்த்தார்கள். ஆன்மீகத்தை தமிழில் இருந்து பிரித்தால் அது உயிரற்ற உடலுக்கு சமம். தென்னாட்டுடை சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றொ என்கிறார்கள். குகனுக்கும் ராமனுக்கும், சபரிக்கும், ராமனுக்குமான உறவு தெரியுமா. இந்து சமூகத்துக்கு சமூக நீதி பேசும் உரிமை இல்லை என்றால், வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை. வேறு யாருடைய உணர்வையும் நாங்கள் மதிக்காமல் இல்லை. ஆனால் நம் தர்மம் மதிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.
 
 

 
நான் தைரியமாக சொல்லிவிட்டு கோயிலுக்கு போகிறேன். மண்டைக்காடு கோயிலுக்கும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் இன்று போவேன். ஆனால் சிலர் வீட்டில் உள்ளவர்களை வைத்து சாமி கும்பிடுவார்கள். அவர்கள் நல்ல நேரம் லார்த்து எல்லாம் தொடங்குவார்கள். நம்மை மூட நம்பிக்கை என சொல்லிவிட்டு அவர்கள் செய்வார்கள். நாம் நமது கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். நம் கலாச்சார அடையாளங்கள் மறுக்கப்படும் போது எதிர்த்து குரல் கொடுப்போம். பட்டமும், பட்டயங்க்களும் வாங்கிய மாணவிகளுக்கு பாராட்டுக்கள்" என்றார்.
 
பின்னர் செய்தியாளர்கள் தி.மு.க-வின் இந்தி திணிப்பு போராட்டம் பற்றி கேட்டதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், "எங்குமே இந்தியை திணிக்கவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிடவேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியை கொண்டுவர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதைவைத்து மட்டும்தான் அரசியல் செய்யமுடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள். தமிழ் தமிழ் என நாம் சொல்கிறோம். இன்றைக்கு மத்திய பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக்கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்காக மட்டும்தான் பேசுகிறீர்கள். தமிழ் மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக்கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே.
 

 
 தேசியகல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள். இது அரசியல் இல்லை. சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.பிரதமர் திருக்குறள் சொன்னால் திருக்குறள் மட்டும் சொன்னால்போதுமா என்கிறார்கள். இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள். உங்களுக்கு எவ்வளவு தாய்மொழிப்பற்று இருக்கிறதோ அதே தமிழ்ப்பற்று தமிழிசைக்கும் இருக்கிறது. நியாயப்படுத்தி பேசினால் இந்தி இசை என நீங்கள் பேசுவதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். நீங்கள் இத்தனை நாள் ஆட்சியில் ஒரு புத்தகம் கொண்டுவந்து தமிழ் மொழியில் மருத்துவக்கல்லூரி கொண்டுவர முடியாதா" என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget