மேலும் அறிய

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம், சிலைகளை காணவில்லை - நிர்வாக அதிகாரி புகார்

திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரங்கள் சட்டவிரோதமாக வெளியே எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பழமையான கொடி மரங்கள் மற்றும் கற்சிலைகள் காணவில்லை என செயல் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஸ்தலமாகும். இக்கோவிலில் வருடம் தோறும் திருவாடிப்பூரஉற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இவ் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். 

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம்,  சிலைகளை காணவில்லை -  நிர்வாக அதிகாரி புகார்

இந்நிலையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார் அதில் கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபரம் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது. குறிப்பாக திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது விழாக்கள் ஆரம்பமாகும் போது கொடியேற்றும் கொடி மரங்கள் மூன்றும் அகற்றப்பட்டு புதிய கொடி மரங்கள் நிர்மானிக்கப்பட்டது. 

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம்,  சிலைகளை காணவில்லை -  நிர்வாக அதிகாரி புகார்

அவ்வாறு அகற்றப்பட்ட பழமையான மூன்று கொடி மரங்களில் செப்பு தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. இச்செயல் சட்ட விரோதமான செயலாகும் காணாமல் போன இரண்டு கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது திருக்கோவில் வெள்ளை அடிப்பு பணியை செய்வதற்காக ஏலம் எடுத்த ரமேஷ் என்ற ராமர் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது சட்டவிரோத செயலாகும். ஆகையால் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். 

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம்,  சிலைகளை காணவில்லை -  நிர்வாக அதிகாரி புகார்

மேலும், முன்னதாக கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டுகளில்  ஸ்ரீ ஆண்டாள் கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழமையான கற்களான யானை சிலைகள் இரண்டு காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரங்கள் சட்டவிரோதமாக வெளியே எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget