மேலும் அறிய

அப்பாவு சட்டமன்ற உறுப்பினர்போல் பேசாமல் சபாநாயகராக இருந்தால் நன்றாக இருக்கும் : சரத்குமார் விமர்சனம்

ஏன் அரசியல் கட்சிதான் செய்ய வேண்டுமா? நீங்கள் களத்தில் இறங்கி போராடாக்கூடாதா என்று மக்களிடம் நான் கேள்விக்கேட்கிறேன். கேட்க வேண்டியது மக்கள்தான். அப்படி கேட்டிருந்தால் இன்று எல்லாம் மாறியிருக்கும்.

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "24 ஆம் தேதி இரவு உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. ஒருமித்த கருத்து அதில் வரவில்லை, இன்னும் ஒருவார கால தாமதமானலும் தீர்க்கமான முடிவு செய்து எப்படி தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோம் என மனதில் வைத்து முடிவெடுக்கலாம் என்று உள்ளோம். 2026 தான் இலக்கு, சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். கட்சியை வளமைப்படுத்துவது, வலிமைப்படுத்துவது என யோசித்து கொண்டு இருக்கிறோம், அந்த நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்துவிட்டது. ஒரு தேர்தலில் இல்லை என்றால் நமது இயக்கம் இல்லாத சூழல் வந்துவிடும். அதனால் இதையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்ன கூட்டணிக்கு செல்லலாம். 2026 இல் பயணம் எப்படி அமையும் என அதனை நோக்கி முடிவெடுக்க உள்ளோம்" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிஜேபியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என சொல்லியிருக்கின்றனர். இந்த சூழலில் தான் பயணித்து கொண்டிருக்கிறோம். நெல்லை தொகுதியில் நிற்கனுமா வேண்டாமா என்பது என்னுடைய முடிவு தான். அதுவும் ஒரு வாரத்திற்கு பிறகு அந்த முடிவு எடுக்கப்படும். 2026 தேர்தல் பயணத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றால் இப்போது எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும், அதை நோக்கியே கூட்டணி அமையும். மத்திய அரசு இணக்கமாக இல்லாத போது குற்றச்சாட்டு வைப்பது மாநில அரசின் செயல்பாடாக இருந்து வருகிறது. முதலில் தொழில் வளத்தை பெருக்க  வேண்டும். 8.33 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. இதற்கு என்ன செய்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக உள்ளது. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்கின்றனர். நிதி கொடுத்தால் முடிந்து விடுமா என்பது எனக்கு தெரியவில்லை. எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள். தொழில்வளத்தை பெருக்க போகிறார்கள், எப்படி வரவு வரப்போகிறது, வரவை மீறி அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறீர்கள், அதனால் தான் இலவசத்தை தவிர்க்க வேண்டும் என்கிறேன்,  உலக முதலீட்டார்   மாநாட்டில் கையெழுத்து போடுகின்றனர், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள், ஆனால் அதன்படி நடக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மக்கள் பணநாயகத்திற்கு அடிமைப்படாமல் கேள்வி கேட்கும் பொழுது, மக்கள் கேட்க உரிமை இருக்கும் பொழுது, ஏன் அரசியல் கட்சி தான் செய்ய வேண்டுமா? நீங்கள் களத்தில் இறங்கி போராடாக்கூடாதா என்று மக்களிடம் நான் கேள்விக் கேட்கிறேன்.  திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்வடிவம் பெறாமல் இருந்தால் கேட்க வேண்டியது மக்கள் தான். அப்படி கேட்டிருந்தால் இன்று எல்லாம் மாறியிருக்கும். 

பதநீர் ஒரு தொழில் தான், அதை கூட கலப்படம் செய்து போதைப்பொருளாக மாற்றி விடுகிறார்கள் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருப்பதால் அதை தவிர்ப்பதற்கான முயற்சி எடுக்கின்றனர். அது பதம் செய்யப்பட்டு ஸ்ரீலங்காவில் விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் இதற்கெல்லாம் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனை ஆராய்வதற்கு தான் சட்டம் உள்ளது. தவறு நடந்து விடும் என்பதை விட தவறு நடக்காமல் இருக்க எப்படி வடிவமைத்து தரலாம் என்ற எண்ணம் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்றார், சபாநாயகர் சட்டமன்றத்தில் உறுப்பினர் மாதிரியே பேசிக்கொண்டு இருக்கிறார், அவர் சபாநாயகராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சித்தார்,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget