மேலும் அறிய

Sabarimala Mandala pooja 2022 : நவம்பர் 16-ந் தேதி சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை தொடக்கம்..! ஆனந்தத்தில் பக்தர்கள்..

சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந் தேதி மாலை தொடங்குகிறது. ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது - ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் நாகர்கோவி லில் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந் தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 -ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந் தேதி நடக்கிறது. சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 மையங்களில் உடனடி முன் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம். சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து அய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை.
 
சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம். அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும். இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.
 
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது.உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள அய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: கேரள மருத்துவ கழிவுகள் இன்று முதல் அகற்றம்! தமிழ்நாட்டில் தொடரும் மழை!
Breaking News LIVE: கேரள மருத்துவ கழிவுகள் இன்று முதல் அகற்றம்! தமிழ்நாட்டில் தொடரும் மழை!
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget