மேலும் அறிய

எடப்பாடிக்கு கண்குருடு, அவரால் முடியவில்லை என்ற வயித்தெரிச்சல் - ஆர்.எஸ்.பாரதி எதற்கு அப்படி சொன்னார்?

"வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீராக உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது"

நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழா:

நெல்லை மாநகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா, தொடர்ந்து 100 நிகழ்வுகள் நடத்திய நெல்லை மாநகர கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, 2024 நெல்லை பாராளுமன்ற தேர்தலில் உழைத்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் விழா  ஆகிய முப்பெரும் விழா நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில்,  மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.  இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி திமுக நிர்வாகிகளைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாளை முன்னிட்டு 27 நாட்களில் 100 நிகழ்வுகள் நடத்திய நிர்வாகிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தொண்டர்கள் என 136 பேருக்கு  பரிசு வழங்கி கவுரவித்தார்.

எடப்பாடிக்கு கண்குருடு, வயித்தெரிச்சலில் பேசுகிறார்:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி  அவர்களது கேள்விக்கு பதில் கூறினார். தமிழக முதலமைச்சர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பிய போது, பதில் அளித்த அவர் அவருக்கு கண் குருடு என்று அர்த்தம். அவர் சிக்காக்கோவில் சைக்கிள் ஓட்டியதை எடப்பாடி பார்க்கவில்லையா? அவரை சைக்கிள் ஓட்ட சொல்லுங்க பார்க்கலாம் என்று பதிலடி கொடுத்தார்.  மேலும் எடப்பாடிக்கு வயித்தெரிச்சல், அவருக்கு நெருக்கடி. கூட இருந்தவர்கள் இருப்பார்களா என்ற சந்தேகம் வந்தால் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழக  முதல்வர் உடல் நலத்துடன்  சிறப்பாக இருப்பதை ஊடகங்களில் பத்திரிக்கைகளில் பார்க்கின்றனர்.  எதையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது என்றார். அமெரிக்கா செல்லும் போது ஊடகங்களை சந்தித்தார். வரும் பொழுது ஊடகங்களை சந்தித்து என்னென்ன சாதித்தார் என்று சொல்வார் என்று தெரிவித்தார்.  

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசும் எடப்பாடி:

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருவது குறித்த கேள்விக்கு, அது வழக்கமாக எதிர்கட்சிகள் மீது  வைக்கக்கூடிய குற்றச்சாட்டு. மணிப்பூர், உத்திரபிரதேசம், குஜராத்தில் நடப்பது போன்றா இங்கு நடந்துள்ளது. எதாவது ஒரு சம்பவத்தை காட்டச் சொல்லுங்கள்.. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீராக உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது என தெரிவித்தார். விளையாட்டு துறை அமைச்சர் போட்டிகள் நடத்தி  கஜானாவை காலி செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், ஆசியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் முதல் முறையாக விளையாட்டு போட்டி நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்களது ஆட்சியில் இதுபோன்று நடத்த முடியவில்லை என்ற  வயித்தெரிச்சலில் அவ்வாறு பேசுகிறார். திமுக கூட்டணியில் எந்த மோதலும் இல்லை, இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்  நீடிக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu ArjunGovt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
Embed widget