மேலும் அறிய
ஏமாந்த கொள்ளையர்கள்....பீரோவில் வைக்காமல் அலமாரியில் வைத்ததால் தப்பிய 200 சவரன் நகைகள்....!
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொள்ளையர்கள் புகுந்த வீடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சகோதரர் தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர். விஜயகுமார் (வயது60). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றார். இதனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் மாடி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இதுகுறித்து கோட்டார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது விஜயகுமார் வீட்டின் மாடி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பீரோவை உடைத்து இருப்பதும் தெரிய வந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்துள்ளது. எனவே அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எவ்வளவு நகை, பணம் வீட்டில் இருந்தது என தெரியவில்லை. விஜயகுமார் குடும்பத்தினர் வந்த பிறகு தான் அது பற்றிய விவரம் தெரியவரும் என்ற நிலையில் கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் விஜயகுமார் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்தார்.

இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விஜயகுமார் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். வீட்டிற்கு வந்த விஜயகுமார் நகை மற்றும் பணம் வைத்திருந்த அலமாரியை சோதனை செய்தார் அதில் அவர்கள் வைத்திருந்த 200 சவரன் தங்க நகையும் அப்படியே இருந்தது இதனால் நிம்மதி அடைந்த விஜயகுமார் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர் , சாதரணமாக பீரோவில் பாதுகாப்பாக இருக்கட்டும் என பூட்டி வைக்கும் பொருட்களை பீரோவை உடைத்து திருடி செல்லும் நிலையில் அலமாரியில் சாதரணமாக நகையை வைத்ததால் அத்தனையும் தப்பியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion