மேலும் அறிய

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

’’பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்வாரியம் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இங்கு வாழும் நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக கவலை’’

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது சரஸ்வதி நகர் கிராமம். இங்கே சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் வசித்து வருபவர்கள் தான் கமலி ஸ்ரீ மற்றும் சுந்தரபாண்டியன். சுந்தரபாண்டியன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயதில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது கீழே கிடந்த கம்பியை எடுத்து மேலே தூக்கி விளையாடும்போது ஊரின் நடுவே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது இரண்டு கைகளையும் காப்பாற்ற முடியாமல் போனது அன்றிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் பள்ளிக்கு சென்று கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சாதனை செய்வதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று கூறும் வகையில் நீச்சல் போட்டியில் பல வெற்றிகளைக் கண்டு அசத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசின் உதவியோடு வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் சுந்தரபாண்டியன். இந்த நிலைமை அடங்குவதற்குள் இதே ஊரில் வசித்து வரும் கமலிஸ்ரீ கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணியை காய வைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த கமலிஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த சிகிச்சை பலனில்லாமல் அவரது வலது கையை இழக்க நேரிட்டது.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்
இதனால் பெரும் துயரம் அடைந்த கமலிஸ்ரீ தற்பொழுது கடும் மன வேதனையில் உள்ளார். எந்த வேலையானாலும் சுறுசுறுப்பாக செய்யும் கமலிஸ்ரீ தற்பொழுது எந்த வேலையும் செய்ய முடியாமல் அடுத்தவரின் உதவியோடு வாழ்ந்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் தங்களது ஊரின் நடுவே வீட்டின் மேற்கூரையை ஒட்டி தாழ்வாக செல்லும் அந்த உயர் அழுத்த மின் கம்பிகள் தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அந்த கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்வாரியம் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இங்கு வாழும் நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர். இந்த ஊரிலுள்ள சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மழை மற்றும் இடி மின்னல் அடித்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலையும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.  இதுபோல பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தாழ்வான மின் கம்பிகளால் பாதிக்கப்பட்டு சிறு சிறு காயங்களுடன் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

இவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதி உதவியும் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான விஷயம். தற்போது தனது கைகளை இழந்து தவிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் கமலிஸ்ரீ போல் இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றும் அதற்கு காரணமான உள்ள இந்த தாழ்வான மின் கம்பிகளை ஊரின் ஒதுக்குப்புறமாக கொண்டுசெல்ல மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Fact Check: நோன்பில் தண்ணீர் குடித்ததற்கு மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி? உண்மை இதுதான் மக்களே!
Embed widget