மேலும் அறிய

முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இணையதளத்தில் முதலீடு செய்தால் வட்டியுடன் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அதற்கான வட்டி அளிக்கப்படவில்லை

ராமநாதபுரத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் 2 லட்சம் மோசடி செய்த பணத்தை வங்கி கணக்கை முடக்கி போலீசார்  மீட்ட சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி சுபாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காமேஷ் முருகன் (24). பொறியியல் பட்டதாரியான இவர் யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கூகுள் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து அதனை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்துள்ளார். இதற்கு உடனடியாக பணம் வந்ததால் தொடர்ந்து முதலீடு செய்து வந்த காமேஷ்முருகன் ஒரு கட்டத்தில் 2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். 

முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இதற்கான 5 சதவீதம் வரை வட்டித்தொகை அந்த செயலியில் வந்த நிலையில் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தவித்துள்ளார். 2 மாத காலம் போராடி பார்த்தும் லாபத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காமேஷ்முருகன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.  இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி காமேஷ்முருகன் செலுத்திய வங்கி கணக்கினை முடக்கி வைத்தனர். இதனால் அந்த வங்கி கணக்கிற்குரிய பண பரிமாற்ற நிறுவனத்தினர், போலீசாரை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு முடக்கி வைத்துள்ளதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் இந்த மோசடி குறித்து தெரிவித்தபோது அந்த பணபரிமாற்ற நிறுவனத்தினர் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு செலுத்துவதற்காக வந்துள்ள தொகை என தெரிவித்தனர்.

மோசடி செய்த பணம் என்று தெரிவித்ததும் பணபரிமாற்ற நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட தனியார் மோசடி நிறுவனத்திற்கு பணத்தினை அனுப்பாமல் காமேஷ்முருகனின் வங்கி கணக்கிற்கு பணத்தினை மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை ராமநாதபுரம் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், காமேஷ்முருகனிடம் வழங்கினார். இணையதள விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த இளைஞருக்கு அப்பணத்தை காவல்துறையினா் மீட்டுக் கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றப்பிரிவினா் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் காமேஷ் முருகன். இவா் இணையதளத்தில் முதலீடு செய்தால் வட்டியுடன் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அதற்கான வட்டி அளிக்கப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காமேஷ் முருகன் நுண்குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நுண்குற்றப்பிரிவினா் நடத்திய விசாரணையில் காமேஷ் முருகன் அளித்த பணம் தனியாா் நிறுவனக் கணக்கில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தனியாா் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை நாங்கள்  முடக்கியதோடு, அதை மீண்டும் காமேஷ் முருகன் கணக்கில் சோ்க்க நடவடிக்கை எடுத்து அதற்கான உத்தரவைப் பெற்றோம். இதனை தொடர்ந்து பணம் திரும்ப காமேஷ்முருகன் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான வங்கி உத்தரவை நுண்குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்ழ் அருண்  அவரிடம் வழங்கினாா் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Union Budget 2025: ஆஹா..! மத்திய அரசின் வருங்காலத்திற்கான முதலீடுகள்..! மாணவர்களுக்கு பட்ஜெட்டில் இருந்தது என்ன?
Union Budget 2025: ஆஹா..! மத்திய அரசின் வருங்காலத்திற்கான முதலீடுகள்..! மாணவர்களுக்கு பட்ஜெட்டில் இருந்தது என்ன?
IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து,  இன்று 5வது டி20 போட்டி..!
IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து, இன்று 5வது டி20 போட்டி..!
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Union Budget 2025: ஆஹா..! மத்திய அரசின் வருங்காலத்திற்கான முதலீடுகள்..! மாணவர்களுக்கு பட்ஜெட்டில் இருந்தது என்ன?
Union Budget 2025: ஆஹா..! மத்திய அரசின் வருங்காலத்திற்கான முதலீடுகள்..! மாணவர்களுக்கு பட்ஜெட்டில் இருந்தது என்ன?
IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து,  இன்று 5வது டி20 போட்டி..!
IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து, இன்று 5வது டி20 போட்டி..!
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Embed widget