தென்காசியில் உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளி - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளி நிர்வாகம் நேற்று மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தகவல் அனுப்பியுள்ளது.
கனமழை பாதிப்பு காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்திருந்தார். மேலும். 20.12.23 புதன்கிழமை மேலும் மழை தொடரும் என்ற காரணத்தினாலும், மாணவ மாணவியர் நலன்கருதி இன்றும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார். மேலும் மாவட்ட கல்வி துறை சார்பில் அதிகாரிகள் சுற்றறிக்கை வெளியிட்டு அனுப்பினர்.
ஆனால் இந்த உத்தரவை மீறி அதற்கு சிறிதும் செவி சாய்க்காமல் பள்ளி சீருடையில் இன்று மாணாக்கர்களை பள்ளி வர சொல்லி உள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளி நிர்வாகம் நேற்று மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தகவல் அனுப்பியுள்ளது. குறிப்பாக இப்பள்ளி விஷ பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடிவாரத்தில் இயங்கிவரும் நிலையில் இன்று வகுப்பிற்கு மாணவர்களை வரவழைத்து வகுப்புகளை நடத்தியது, இதனால் ஆட்சியர் அறிவித்தும் விதியை மீறி மாணவர்கள் நலன் மீது அக்கறை இன்றி செயல்படும் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து உடனடியாக பள்ளி அனுப்பிய மெசேஜ் நகலுடன் மாவட்ட ஆட்சியர் (எண் : 94450 53533) மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (எண் : 96290 70903), மாவட்ட கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் (எண் : 94428 93039) ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலம் சில பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் எல்லாம் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ஏற்று உடனுக்குடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சில குறிப்பிட்ட பள்ளிகள் அரசின் உத்தரவுகளை, அரசு நிர்வாகத்தின், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை மதிப்பதே இல்லை. அதிகாரிகளும் தனியார் பள்ளிக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு வருகின்றனர்.