மேலும் அறிய
Advertisement
கோவை கார் வெடி விபத்து எதிரொலி: குமரியில் அலெர்ட் ஆன போலீஸ்: பாதுகாப்பு அதிகரிப்பு
கோவை கார் வெடி விபத்து எதிரொலியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது
கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் பலியானார். இதையடுத்து தமிழகம் முழு வதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. போலீசார், கார்களில் வருபவர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து வருவதுடன் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை மேற்கொண்டு உள்ளனர். இதே போல் ஆரல்வாய் மொழி, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி, நாங்குநேரி, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion