மேலும் அறிய

நெல்லை டவுண் ஸ்வீட் கடை உரிமையாளருக்கு கத்தி குத்து...! உறவினர்கள், வியாபாரிகள் மறியல் போராட்டம்...!

அப்போது அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இதே போல் கடையில் வாளுடன் வந்த நபர் தகராறு செய்ததாகவும்,  அதனால் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்த நிலையில் மீண்டும் வெளியே வந்த அவர்  கடையில் இருந்த செல்வகுமாரை தாக்கியுள்ளார் எனவும் தெரிவித்தனர். 

நெல்லை டவுண் சாலியர் தெருவைச் சோ்ந்தவர் தங்கராஜ்.  இவர் அப்பகுதியில் ஸ்வீட்ஸ் & பேக்ஸ் எனும் கடை நடத்தி வருகிறார்.  இந்த நிலையில்  நேற்று இரவு தங்கராஜ் மகன் செல்வகுமார் கடையில் வழக்கம் போல் வியாபாரம் செய்து வந்துள்ளார். பின் இரவு வீட்டிற்கு கிளம்புவதற்காக கடையை அடைக்கும் நேரத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென செல்வகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக செல்வகுமாரை தாக்கினார். இதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். இரத்தம் சொட்ட சொட்ட காயமடைந்த அவரை உடனடியாக  அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த  உறவினர்கள் மற்றும் சாலியர் தெரு  வியாபாரிகள்,  பொதுமக்கள் என அனைவரும் திரண்டு வந்து டவுண் லாலா சத்திர முக்கு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இதே போல் கடையில் வாளுடன் வந்த நபர் தகராறு செய்ததாகவும்,  அதனால் காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்த நிலையில் மீண்டும் வெளியே வந்த அவர்  கடையில் இருந்த செல்வகுமாரை தாக்கியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.  மேலும் டவுண் சாலியர் தெரு பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு என்பது இல்லை. எனவே உடனடியாக காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனவும், சாலியர் தெரு பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய  போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்வதாகவும்,  கஞ்சா நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து டவுண்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாநகர பகுதிக்குள் வரும் கனரக வாகனங்கள் வரிசையில் நின்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் டவுண் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget