மேலும் அறிய

IVF முறையில் குழந்தை பெற்றவர் உயிரிழப்பு - கருவுறு மைய மருத்துவர்கள் ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சாந்த மீனாவின் மரணத்திற்கு கோயமுத்தூர் தலைமை இடமாகக் கொண்ட வம்சம் கருவுறுதல் மைய மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை கொடுக்கவில்லை.

நெல்லை மாநகர் தச்சநல்லூர் அருகே விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சாந்த மீனா. இவர்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து  கோயமுத்தூர்  வம்சம் கருவுறு மையத்தில் ஐவிஎஃப் முறையில் தனது மனைவியான சாந்த மீனாவுக்கும் தனக்கும் குழந்தை வேண்டி  நெல்லையில் உள்ள வம்சம் கருவுறுதல் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் குழந்தை பெறும் சமயத்தில் சாந்த மீனாவிற்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் திருநெல்வேலி கிளையிலிருந்து சாந்த மீனாவை கோயமுத்தூர் தலைமை இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு அவருக்கு குழந்தை பேரு பார்க்கப்பட்டது. அப்போது  இரட்டை குழந்தைகள் (ஆண், பெண்) பிறந்துள்ளது. இந்த நிலையில் மகேந்திரன் மனைவி சாந்த மீனா கோயமுத்தூர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.

சாந்த மீனாவின் மரணத்திற்கு கோயமுத்தூர் தலைமை இடமாகக் கொண்ட வம்சம் கருவுறுதல் மைய மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை கொடுக்கவில்லை என்றும், முழு மாத கர்ப்பிணியான சாந்த மீனாவை நெல்லையில் இருந்து கோவைக்கு 10 மணி நேரம் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அலைக்கழிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டிய மகேந்திரன், இதுதொடர்பாக நெல்லை நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இவ்வழக்கானது  நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கினை விசாரணை செய்த  விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர்  சேகர் உறுப்பினர்கள் சாந்தி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் வம்சம் கருவூரும் மையம் செய்த மருத்துவ கவனமின்மையால் மனுதார் மனைவிக்கு மரணம் ஏற்பட்டுள்ளது எனவும், மனுதாரர் கருவுறுவதற்கு செலவிடப்பட்ட தொகையான ரூபாய் 6 லட்சத்தி 992 மற்றும் மற்றும் மருத்துவ கவன குறை  சிகிச்சை கொடுத்தவைக்கு  இழப்பீடு இரண்டு லட்ச ரூபாயும், அதனை வழக்காக தாக்கல் செய்த 2017ம் ஆண்டு தேதியில் இருந்து ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்தும் மற்றும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 லட்ச ரூபாயும் வழக்குச் செலவிற்கு ரூபாய் 10,000 சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வம்சம் கருவுறு மையத்தின் மருத்துவர்கள் இருவரும்  சேர்ந்து ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும்  என உத்தரவு பிறப்பித்துள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மிABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget