IVF முறையில் குழந்தை பெற்றவர் உயிரிழப்பு - கருவுறு மைய மருத்துவர்கள் ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சாந்த மீனாவின் மரணத்திற்கு கோயமுத்தூர் தலைமை இடமாகக் கொண்ட வம்சம் கருவுறுதல் மைய மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை கொடுக்கவில்லை.
நெல்லை மாநகர் தச்சநல்லூர் அருகே விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சாந்த மீனா. இவர்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து கோயமுத்தூர் வம்சம் கருவுறு மையத்தில் ஐவிஎஃப் முறையில் தனது மனைவியான சாந்த மீனாவுக்கும் தனக்கும் குழந்தை வேண்டி நெல்லையில் உள்ள வம்சம் கருவுறுதல் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் குழந்தை பெறும் சமயத்தில் சாந்த மீனாவிற்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் திருநெல்வேலி கிளையிலிருந்து சாந்த மீனாவை கோயமுத்தூர் தலைமை இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு அவருக்கு குழந்தை பேரு பார்க்கப்பட்டது. அப்போது இரட்டை குழந்தைகள் (ஆண், பெண்) பிறந்துள்ளது. இந்த நிலையில் மகேந்திரன் மனைவி சாந்த மீனா கோயமுத்தூர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.
சாந்த மீனாவின் மரணத்திற்கு கோயமுத்தூர் தலைமை இடமாகக் கொண்ட வம்சம் கருவுறுதல் மைய மருத்துவர் சரியான முறையில் சிகிச்சை கொடுக்கவில்லை என்றும், முழு மாத கர்ப்பிணியான சாந்த மீனாவை நெல்லையில் இருந்து கோவைக்கு 10 மணி நேரம் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று அலைக்கழிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டிய மகேந்திரன், இதுதொடர்பாக நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இவ்வழக்கானது நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கினை விசாரணை செய்த விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் சேகர் உறுப்பினர்கள் சாந்தி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் வம்சம் கருவூரும் மையம் செய்த மருத்துவ கவனமின்மையால் மனுதார் மனைவிக்கு மரணம் ஏற்பட்டுள்ளது எனவும், மனுதாரர் கருவுறுவதற்கு செலவிடப்பட்ட தொகையான ரூபாய் 6 லட்சத்தி 992 மற்றும் மற்றும் மருத்துவ கவன குறை சிகிச்சை கொடுத்தவைக்கு இழப்பீடு இரண்டு லட்ச ரூபாயும், அதனை வழக்காக தாக்கல் செய்த 2017ம் ஆண்டு தேதியில் இருந்து ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்தும் மற்றும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 லட்ச ரூபாயும் வழக்குச் செலவிற்கு ரூபாய் 10,000 சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வம்சம் கருவுறு மையத்தின் மருத்துவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்