மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

அடுப்பு வெடித்து தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு - நெல்லையில் சோகம்

முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் டேங்கில் காற்று அடித்தபோது அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் சத்யா தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி பகவதி அம்மாள்(78). இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் தனது வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் அடுப்பில் தான் தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்றும் சமையல் செய்வதற்காக பகவதி அம்மாள் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்த போது அடுப்பு திடீரென தீ பற்றி உள்ளது. பின் பயங்கர சத்தத்துடன் அடுப்பானது வெடித்து சிதறியுள்ளது. இதில் தீயானது  மூதாட்டியின் உடலில் பற்றி எரிந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கருகி உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டி தீயில் கருகிய நிலையில் கிடந்தார். உடனே அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 


அடுப்பு வெடித்து தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு - நெல்லையில் சோகம்

மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் டேங்கில் காற்று அடித்தபோது அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுப்பு வெடித்து தான் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும், மூதாட்டியின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து மூதாட்டி தீயில் கருகி பலியான சம்பவம்  நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget