Watch video: பெண்ணை மனுவால் அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
”மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? தீர்வை தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் - பாஜக அண்ணாமலை”
விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் ஓரிரு நாட்களுக்கு முன் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டு பராமரிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கொடுக்கக்கூடிய 5 ஆடுகளுமே மிகச்சிறிய ஆடுகள் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மேல் உயிர் பிழைப்பது கடினம். இப்படிப்பட்ட ஆடுகளை கொடுப்பதற்கு பதிலாக இவர்கள் கொடுக்காமலேயே இருக்கலாம். வளர்ந்த குட்டிகளை கொடுத்தால் மட்டுமே அது உயிர் பிழைத்து வாழும் அல்லது இவ்வாறு செய்தால் ஓரிரு வாரங்களில் ஆட்டு குட்டிகள் இறந்துவிடும். இதனால் வளர்க்கும் அவர்களுக்கும் நஷ்டம். எந்த ஒரு ஆடுகளுக்குமே தற்போது வரை இன்சூரன்ஸ் போடாமலே அரசு வழங்கி வருகிறது. முதலில் வளர்ந்த நல்ல ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதையும் இன்சூரன்ஸ் போடுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்..
இந்த நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்கள் அமைச்சரிடம் தங்களது குறைகளை மனுக்களாக கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை அந்த மனுவால் அவரது தலையில் அறைந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு சமூக வலைத்தலங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
— K.Annamalai (@annamalai_k) July 12, 2022
விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! pic.twitter.com/iV4fyKLnXQ
இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கண்டனத்தையும் அமைச்சருக்கு தெரிவித்துள்ளார். அதில் மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? தீர்வை தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த சூழலில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் மீது எழுந்துள்ள இந்த புகாரை தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து அந்த வீடியோ காட்சி தொடர்பான விளக்கத்தை கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்