மேலும் அறிய
Advertisement
மறுகால் பாயும் தண்ணீரால் கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலை தூண்டிப்பு
சாலை துண்டிக்கப்பட்டதால் மேலக்கரந்தை, தாப்பாத்தி வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி அயன் வடமலாபுரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எட்டையாபுரம் அருகே மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்வதால் கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
எட்டையாபுரம் அருகே மேலக்கரந்தை பாசனக்கல்மாய்க்கு மாவில்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் வந்து சேர்கிறது. மேலகரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் ஓடை வழியாக ஆற்றங்கரை கண்மாயை சென்றடைகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் தண்ணீர் பாய்கிறது. இதன் காரணமாக மறுகால் ஓடை செல்லும் கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சாலையில் உள்ள தாம்போதி பாலத்தில் உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல பணிகளுக்காக அதன் அருகிலேயே அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அயன் வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் கூறுகையில், ”ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் போது அதன் தண்ணீர் கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலையில் உள்ள தாம்போதி வழியாக செல்லும். அப்போது சுமார் இரண்டு மாத காலம் அந்த சாலை துண்டிக்கப்படுவது வழக்கம். இதனால் நாங்கள் உயர்மட்ட பாலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம். இதற்கிடையே கீழக்கரந்தை முதல் அயன் வடமலாபுரம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை இருந்த வண்டிப்பாதை கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில் தார் சாலையாக மாற்றப்பட்டது. மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் செல்லும் சாலையில் உள்ள தாம்போதியை உயர்மட்ட பாலமாக கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக மாற்று பாதையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் என்பது மானாவாரி விவசாய காலமாகும், விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய உரங்கள் விதைகள் மற்றும் விவசாய பணிக்கு ஆட்களை அழைத்துச் செல்ல என விவசாயப் பணியில் இருப்போம். ஆனால் சாலை துண்டிக்கப்பட்டதால் மேலக்கரந்தை, தாப்பாத்தி வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி அயன் வடமலாபுரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் இடையே வேறு மாற்றுப்பாதை எப்படித் தர வேண்டும்” என்கிறார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion