மேலும் அறிய

Lok Sabha Election 2024: வீட்டுக்காக உழைப்பவர்கள் தி.மு.க.! நாட்டுக்காக உழைப்பவர்கள் அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பரப்புரை

தி.மு.க. வீட்டு மக்களுக்காக உழைக்கிற கட்சி, அ.தி.மு.க. நாட்டு மக்களுக்காக உழைக்கிற கட்சி என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

நெல்லை டவுண் வாகையடி முக்கில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. கார்ப்பரேட்:

அப்போது பேசிய அவர், "தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க..வுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எளிதில் அணுகக் கூடியவன் நான். அ.தி.மு.க. ஜனநாயக அமைப்பு உள்ள கட்சி. அதனால் தான் நான் இங்கு பெரிய பதவி பெற்று இருக்கிறேன். இது வேற எந்த கட்சியிலும் கிடையாது. முதல்வர் ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றி தெரியாது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். திமுக வீட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி. அதிமுக நாட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி.  திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.

திமுகவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த கம்பெனியில் உறுப்பினராக உள்ளனர். திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. திமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் வாரிசுகள் அல்லது கோடீஸ்வரர்களாக தான் உள்ளனர். அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட வேட்பாளராக போட்டியிட முடியும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது ஸ்டாலினால் அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.

பயப்படமாட்டோம்:

அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி மீண்டும் தலை தூக்கி விட்டால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. மன்னர் பரம்பரையா? இந்த நாடு ஜனநாயக நாடு இது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளராகலாம். இது திமுகவில் நடக்காது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதிமுக பயந்து விடும் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார். உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் நாங்கள் பயந்தது கிடையாது. அதிமுகவில் அனைவரும் மண்வெட்டி பிடித்தவர்கள். யாருக்கும் பயப்படுவார்கள் அல்ல. வழக்கு பதிவு செய்துவிட்டால் அதிமுகவை அழித்து விடலாம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். வீட்டுக்குள் இருந்து கொண்டு எதுவும் தெரியாத திறனற்ற முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

சிவாஜி நடிப்பை மிஞ்சிய ஸ்டாலின்:

ஒரு காலத்தில் மன்னர்கள் வீட்டில் இருந்து கொண்டு நாட்டில் நடப்பதை அமைச்சர்களிடம் விசாரிப்பார்கள். அதேபோல் வீட்டில் இருந்து கொண்டு அமைச்சர்களிடம் நாட்டில் நடப்பது குறித்து முதலமைச்சர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணியை ஸ்டாலின் கள்ளக் கூட்டணி என சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் வைத்துள்ளது தான் கள்ளக் கூட்டணி. பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு எங்களை கள்ளக் கூட்டணி எனச் சொல்லும் ஸ்டாலின் நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சி விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்து கொண்டு எதனைப் பற்றி பேச வேண்டும் என தெரியாமல் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். சிரித்து பேசினால் பல் தான் தெரியும். வேர்காவில் உள்ளவர்கள் வீரணையாக பார்க்கும் போது பாஜகவினரிடம் சரணாகதி அடைந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக யாருக்கும் அஞ்சும் கட்சி அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல. பாஜகவை விட்டு நாங்கள் விலகி வந்து விட்டோம். எங்களை கொச்சைப்படுத்தி மக்கள் இடம் பேசி விட்டால் வெற்றி பெற்று விடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எதை பேசினாலும் சிரித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என நினைக்க கூடாது நான் எப்படிப்பட்டவன் என தெரியாது. கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும். நாட்டில் உதவாக்கரை முதலமைச்சர் என்றால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினாகத்தான் உள்ளார்.

Lok Sabha Election 2024: வீட்டுக்காக உழைப்பவர்கள் தி.மு.க.! நாட்டுக்காக உழைப்பவர்கள் அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பரப்புரை

போதைப் பொருள் விற்பனை:

மூன்றாண்டு காலமாக தமிழகத்தை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து மாணவர்கள் இளைஞர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக இளைஞர்கள் சீரழிவதற்கு திமுக ஆட்சி தான் காரணம். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் கைகோர்த்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்து கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டால் வேறு வேறு காரணங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் இதற்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை எதிர்த்து பேச முடியுமா என மேடைக்கு மேடை ஸ்டாலின் கேட்டு வருகிறார்.

22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். நாங்கள் ரியலாக எதையும் செய்கிறோம். எதை எதிர்க்க வேண்டுமோ அதை கண்டிப்பாக எதிர்ப்போம், எதை ஆதரிக்க வேண்டுமோ அதை ஆதரிப்போம். இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் காவேரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்தி வைத்தோம்.

ஆனால் நீட் பற்றி பேசும் முதலமைச்சர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க திராணி இருக்கிறதா? திமுகவின் உறுப்பினர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போது தான் நீட் கொண்டுவரப்பட்டது. ஆனால் நீட்டை ஒழிப்போம் என ஸ்டாலின் நாடகம் போடுகிறார். நீட்டை ஒழிக்க ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொன்னார். ஆனால் அந்த ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீட்டுக்கு எதிராக பல லட்சம் கையெழுத்தை பெற்று சேலம் இளைஞர் அணி மாநாட்டில் காற்றில் பறக்க விட்டதுதான் மிச்சம்" என அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
11th Result Subject Wise: கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Suchithra: ”அந்த கூட்டம் தான் காரணம்” -  சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
”அந்த கூட்டம் தான் காரணம்” - சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
Embed widget