மேலும் அறிய
Advertisement
Local body elections | நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 2026 பேர் மனு தாக்கல்
21 வயது இளம் பெண் முதல் 72 வயது மூதாட்டி வரையிலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல்முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதனை யொட்டி குமரி மாவட்ட அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது, மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் என ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது, தேர்தலில் போட்டி போட அரசியல் கட்சியினர் மட்டும் இல்லாமல் சுயேட்சை வேட்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | தயவு செய்து ஆன்லைனில் வேட்புமனுத்தாக்கல் செய்யும் முறையை கொண்டு வாருங்கள் - குமுறும் காஞ்சிபுரம் மக்கள்
பட்டதாரி இளைஞர்கள்,ஆட்டோ ஓட்டுநர்கள், கடை வியாபாரிகள் என பல தரப்பினரும் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 30 க்கு மேற்பட்டோர் மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த்தால் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை வரிசைபடுத்தி உள்ளே அனுமதித்தனர். முன்னாள் நகர்மன்ற தலைவியாக இருந்த மீனாதேவ் இன்று பாரதீய ஜனதா கட்சி சார்பில் 29 வது வார்டு க்கு வேட்புமனுதாக்கல் செய்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Urban Local Body Election| கம்பம் சேர்மேன் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகர் செயலாளர்கள்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- TN Local body election 2022 | வயலில் வைத்து வணங்கி வேட்புமனுவை தாக்கல் செய்த பட்டதாரி இளம்பெண்
அதேப்போன்று தேர்தலில் 17 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக 21 வயதே ஆன பட்டதாரி இளம் பெண் கௌசுகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும் கோட்டர் பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி மூக்கம்மா என்பவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்புமனுதாக்கல் செய்தார்.மாவட்டம் முழுவதும் உள்ள 828 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு நேற்று ஒரே நாளில் 2026 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் இதுவரை 3090 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion