மேலும் அறிய

ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. கன்றுக்குட்டி சத்தம் கேட்டு வந்து சிறுத்தையை விரட்டியடித்த மக்கள்

உடனடியாக ஊருக்குள் புகுந்த இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் அதோடு வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அனவன் குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பல குடும்பங்கள் அங்கு விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மலையடிவார பகுதி என்பதால்  அடிக்கடி காட்டுபன்றி, சிறுத்தை,யானை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் இந்த குடியிருப்பு பகுதிக்கு நோக்கி வருவது வழக்கம்.  அதோடு யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திப்பதாக தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் பொட்டல் என்னும் கிராமத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி சென்றது. சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து பயனின்றி யானைகள் அழித்து விட்டதாக வருத்தம் தெரிவித்ததோடு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இது ஒருபுறமிருக்க விலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக நேற்றிரவு அனவன்குடியிருப்பு பகுதியில் மாரியப்பன் என்பவரது வீட்டில் வளர்த்து வரும் 2 வயது மதிக்கத்தக்க கன்று குட்டியை சிறுத்தை கன்றுகுட்டியின் கழுத்து, வாய் பகுதியில் தாக்கி உள்ளது. கன்றுகுட்டியின் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை நின்றுள்ளது. உடனே கூச்சலிட்டு அதனை விரட்டியடித்துள்ளனர். மேலும் உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. கன்றுக்குட்டி சத்தம் கேட்டு வந்து சிறுத்தையை விரட்டியடித்த மக்கள்

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளாகவே வனவிலங்குகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதியில் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும்,காட்டு பகுதியில் மேச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பிடித்து சென்று வருகிறது.. தற்போது குடியிருப்பு பகுதியில் நுழைந்து கன்றுகுட்டியை தாக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர இங்குள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக ஊருக்குள் புகுந்த இந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் அதோடு வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
ABP Premium

வீடியோ

Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
DMDK: பிரேமலதாவின் காத்திருப்பு வொர்த்தா? தேமுதிக-விற்கு அடிக்கப்போகுதா ஜாக்பாட்?
America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
TN Power Shutdown (19-2-2026): அம்மாடியோவ்.. அலர்ட் மக்களே.. 14 மணி நேரம் மின்தடை! எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்!
Royal Enfield Continental GT 650: அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
அப்படி போடு.! புது லுக்கில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650; அறிமுகம் எப்போது.?
eVitara vs Windsor: இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
இவிதாரா, விண்ட்சர் கார்களை மலிவாக்கும் சூப்பரான பேட்டரி ஆப்ஷன்; வாடகை எவ்வளவு.? எது குறைவு.?
Embed widget