மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி TO காஷ்மீர்; சோகத்தில் முடிந்த சாகச பயணம் - நடந்தது என்ன..?
கன்னியாகுமரி டூ காஷ்மீர் ஸ்கேட்டிங் பயணம் வெற்றியை நெருங்கிய நிலையில் முப்பது வயதான ஹஜாஸ் லாரி மோதி பலி.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகே உள்ள புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியை சேர்ந்த அலியார் குஞ்ஞு - ஷைலா பீவி ஆகியோரது மகன் அனஸ் ஹஜாஸ்(30). ஹஜாஸ் ஸ்கேட்டிங் சாகசம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் புதிதாக சாதிக்க எண்ணியவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகச பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார். கடந்த மே மாதம் 29-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரியில் இருந்து மதுரை, பெங்களூர், ஹைதராபாத் வழியாக பயணித்தார் அனஸ் ஹஜாஸ். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் தாண்டி ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளதாகவும். இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முக்கிய பாயிண்ட்களை கடக்கும்போதும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டும் வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை சாலை விபத்தில் அனாஸ் மரணமடைந்துள்ளார். அனஸ் ஹஜாசின் மொபைல் போனில் அழைத்த அவரது நண்பரிடம் விபத்து நடந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும், அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அனஸ் ஹஜாசின் உடல் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனஸ் ஹஜாசின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் ஹரியானா சென்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற அனஸ் ஹஜாஸ் பின்னர் டெக்னோ பார்க்கிலும், தனியார் ஸ்கூலிலும் பணிபுரிந்துள்ளார். யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்தவர், ஸ்கேட்டிங் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணத்தை தொடங்கினார். தன் லட்சியத்தை எட்டிப்பிடிக்க இருந்த சமயத்தில் மரணத்தை தழுவியுள்ளார். அனஸ் ஹஜாசின் மரணம் ஸ்கேட்டிங் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion