மேலும் அறிய
கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை
கடலில் இருந்து பார்த்த டச்சு நாட்டு படைகள் உண்மையான பிரங்கிகள் என நினைத்து மன்னரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்த வீரர்கள் கடலில் படகு மூலம் சென்று கைது செய்தனர் ,
![கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை Kanyakumari Soldiers defeated the Dutch forces were given floral tributes கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/afca440188be74eef310334e15f3f0a41659167354_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராணுவ மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பண்டைய காலத்தில் நடைபெற்ற போரில் டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 281 ஆவது ஆண்டு வெற்றி நினைவு தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதையை செலுத்தினார்கள். திருவனந்தபுரம் ராணுவ தள பட்டாலியன் உயர் அதிகாரிகள் மற்றும் குளச்சல் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் இந்த பகுதிகளை கைப்பற்ற டச்சு நாட்டு படைகள் கடல் மார்க்கமாக அதன் தளபதி டிலணாய் தலைமையில் குளச்சலை நோக்கி வந்தனர். போரில் ஒரு கட்டத்தில் அப்போது திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் நவீன ரக பீரங்கிகள் ஏதும் இல்லை. ஆனால் டச்சு படைகளிடம் துப்பாகிகள் பீரங்கிகள் உள்ளன. அவர்களை எதிர்கொள்ள திருவிதாங்கூர் படைகளுக்கு முடியாத நிலை இருந்தது. மன்னரின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கபட்டது.
![கன்னியாகுமரி: டச்சு படைகளை வென்ற வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/91e7cc5a8fb90300f72b78a4061802e61659167395_original.jpg)
அதன்படி ஏராளமான கட்ட வண்டிகளில் பனை மரத்தடிகளை வைத்து பிராங்கிகள் போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்தி வைத்தார். கடலில் இருந்து பார்த்த டச்சு நாட்டு படைகள் உண்மையான பிரங்கிகள் என நினைத்து மன்னரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்த வீரர்கள் கடலில் படகு மூலம் சென்று கைது செய்தனர். 1741 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் படைகள் டச்சு படைகளை ராஜதந்திரத்தால் வென்ற 281 ஆவது ஆண்டு வெற்றி தினம் இன்று குளச்சலில் கொண்டாடபட்டது. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதையை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் ராணுவ தள பட்டாலியன், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் குளச்சல் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion