மேலும் அறிய

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்

சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி இறஞ்சிலி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32) மீனவரான இவருக்கு ரீனா என்ற பெண்ணுடன் திருமணமாகி சதீஷின் செயல்பாடுகள் பிடிக்காமல் போக ரீனா பிரிந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிமையில் இருந்து வந்த சதீஷ் அவ்வப்போது கடலில் நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஷை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் திடீரென சதீஷ் தலைமறைவாகி விட்டார்.
 
பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
பின்னர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் சதீஷை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் சதீஷை சல்லடை போட்டு தேடி வந்தனர் இருந்தும் அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளியான சதீஷ் குறித்த ஒருசில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன அதில் சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது.
 
மேலும் அவ்வப்போது பள்ளியாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் நேற்று இரவு சதீஷ் வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்டு அவரது வீட்டை போலீசார் கட்டுபாட்டில் கொண்டு வந்து கண்காணித்து வந்த வேளையில் சீதீஷ் நள்ளிரவு நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் எல்லாம் தூங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார் இதனை கண்ட போலீசார் சதீஷை சுற்றி வளைத்துள்ளனர் உடனே அங்கிருந்து சதீஷ் தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் போலீசார் அவரை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.இதனையடுத்து 10 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து போலீசாருக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வந்த சதீஷ்-ஐ போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புலியூர்குறிச்சியில் நர்ஸரி கார்டன் ஊழியரிடம் 5 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
 
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் இவர் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் பூ செடிகள் விற்பனை செய்யும் நர்ஸரி கார்டன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கார்டனில் வட்டம் பகுதியை சேர்ந்த சாந்தாபாய் என்ற பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் சாந்தாபாய் கார்டனுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பூ செடிகளை காண்பித்து அவற்றின் விலைகளை சொல்லி கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இரண்டு மர்ம நபர்களில் ஒருவன் கைக்குட்டையால் முகத்தை மறைத்து கார்டனுக்குள் வந்து சாந்தாபாய் இடம் பூச்செடிகளின் விலைகளை கேட்டுள்ளார். சாந்தாபாய் விலைகளை சொல்லி கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைது கழுத்தில் கிடந்து 5-சவரன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் அறுத்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார்.
 
பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
சாந்தாபாய் சில மீட்டர் தூரம் சத்தம் போட்டு கொண்டே துரத்தி ஓடினார் இருப்பினும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தாபாய் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் டி.எஸ்.பி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது புல்லட் வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் முகத்தில் கைக்குட்டையை அணிந்து நீல நிற பேன்ட் சட்டையுடன் வரும் நபர் தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகைள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget