மேலும் அறிய

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

‘நான் வீடு கட்டுவதாக புகார் கூறுகிறார்கள். என்னை கைது செய்ய முடிந்தால் கைது செய்யுங்கள். தேவை இல்லாமல் மிரட்டிக் கொண்டு இருக்காதீர்கள்’ - அண்ணாமலை

பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவருக்கு ஆலய பங்குதந்தை குமார்ராஜா மாதாவின் உருவப்படத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா கட்சி மாநிலதலைவர் அண்ணாமலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

அப்போது அவர் பேசுகையில், “முதல்-அமைச்சர் ஏற்கனவே துபாய் சென்று வந்தார். இதுவரை அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. பா.ஜனதா கட்சி பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. ரூ.1000 கோடி ஒப்பந்தம் செய்த ஒரு நிறுவனத்தின் முகவரியில் உதயநிதி பவுண்டேசன் முகவரியும் உள்ளது. இதனால் உதயநிதி பவுண்டேசன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைக்க உள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். 

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

நான் கர்நாடகாவுக்கு இணை தேர்தல் பொறுப்பாளராக சென்ற போது, பத்திரிகையாளர் சந்திப்பில் மேகதாது அணை கட்டக்கூடாது என்று கூறினேன்.  ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்தோ, தமிழக காங்கிரசிடம் இருந்தோ எந்த கண்டனமும் வரவில்லை. முல்லை பெரியாரிலும் இதே பிரச்னைதான் நடந்தது. 

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

தமிழகத்தின் உரிமையை முதல்-அமைச்சர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவர்களால் முடியவில்லை என்றால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது. இதற்காக இங்கிருந்து, மேகதாது நோக்கி தமிழக பா.ஜனதா கட்சி நடைபயணம் கூட மேற்கொள்ளும். அமைச்சர் பொன்முடி, கவர்னர் கூட்டத்தில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி உள்ளார். துணைவேந்தர்களை எப்போதும் கவர்னர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். தற்போது அரசியல் செய்கிறார்கள். தமிழக அரசு எப்போது திருந்தப் போகிறது என்று தெரியவில்லை. இவர்களின் மனப்பான்மையால் தமிழில் 36 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர். இதே மனப்பான்மையில் இருந்தால் அடுத்த ஆண்டு அதிகரிக்கத்தான் செய்யும். பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காலம் தான் பதில் சொல்லும். 

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

எஸ்.வி.சேகர் பிராமணர்கள் பா.ஜனதா கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாக கூறுகிறார்கள். நான் யாருக்கும் விரோதி அல்ல.  ஆனால் பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாது. எல்லோரையும் அரவணைத்து செல்கிறேன். டெல்லிக்கு சென்று பேசுங்கள். என்னை தூக்குங்கள். கண்ணில் மஞ்சள் காமாலை இருந்தால் அப்படித்தான் தெரியும். சிலபேருக்கு கட்சிக்குள்ளேயே அந்த வியாதி வந்து விடுகிறது. கண்ணை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக பா.ஜனதா கட்சி எல்லோருக்கும் சொந்தமானது. இதனை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.  நான் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பேன். தொண்டர்களுக்காக இருக்கும் தலைவன் நான். கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் தலைவன் நான். 

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீட்டை வளர்க்க வேண்டும். சென்னைக்கு வெளியில் தொழில்வளம் கொண்டு வர வேண்டும். இதனால் இளைஞர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள். தென்மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை நாம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தற்போது காப்பருக்காக சீனாவை நோக்கி கைட்டி நின்று கொண்டு இருக்கிறோம். தூத்துக்குடியில் ஆக்கப்பூர்மான பணிகளை செய்யும் அமைச்சர்கள் இல்லை. மூடப்பட்ட ஆலைகளுக்கு சலுகைகள் வழங்கி நிலைத்து இருக்க வைக்க வேண்டும்.

ஜூலை 9-ந் தேதி ஊழல் எதிர்ப்பு நடைபயணம் தொடங்குகிறேன். இதனால் ஜூலை முதல்வாரத்தில் ஊழல் தொடர்பான 2-வது பட்டியல் வெளியிடப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒதுக்கப்படும் நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இது வருத்தப்படவேண்டிய விஷயம். தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர்கள் கையில் இருப்பது போன்றுதான் உள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பரை இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது” - அண்ணாமலை

ராகுல்காந்தி அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவரை வரவேற்றவர்களுக்கு பாகிஸ்தான் அடையாளம் உள்ளது. அங்கு இந்திய வம்சாவளியினரிடம் நடந்த கூட்டத்தில், தேசிய கீதத்தை அவமதிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் பாகிஸ்தான் காரர்களாகத்தான் இருப்பார்கள். அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சி எங்கள் வேலை இல்லை. அதனை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. நான் 2 ஆண்டுகளாக கூறிக் கொண்டு இருக்கிறேன். நான் வீடுகட்டுவதாக புகார் கூறுகிறார்கள். என்னை கைது செய்ய முடிந்தால் கைது செய்யுங்கள். தேவை இல்லாமல் மிரட்டிக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் ஓட்டைப்படகு என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். அவர்களின் விவரங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். எத்தனை நாள் ஏமாற்ற முடியும். தி.மு.க. அமைச்சர்களுக்கு தைரியம் கிடையாது. காலம் அவர்களை அழிப்பது உறுதி. தற்போது அந்த வேலையை நாங்கள் எடுத்து உள்ளோம். என் மீது பல மானநஷ்ட வழக்கு போட்டு உள்ளார்கள். தைரியம் இருந்தால் கோர்ட்டுக்கு வாருங்கள். தி.மு.க. அழிவு தமிழக மண்ணில் கண்டிப்பாக நடக்கும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget