மேலும் அறிய
கன்னியாகுமரி: குளச்சல் துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரிப்பு - மகிழ்ச்சியில் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன்களின் வரது அதிகரிப்பு - அதிக விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி மீன் சந்தை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகரிப்பால் அதிக விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் குமரி மாவட்டம், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சின்னமுட்டம், குளச்சல் , தேங்காய்பட்டனம் என 3 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு சுமார் 2000 விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள். கடந்த இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் "கொழி சாளை" மீன்கள் பிடிப்பட்டிருந்தன. இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில் மீன்களின் தேவை அதிகமாக இருந்ததால் ஏராளமான வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்ல துறைமுகத்தில் உள்ள எல்லா கூடத்தில் குவிந்தனர். இதனால் விலையும் கணிசமாக குறைந்த நிலையில் இந்த மீன்களை வாங்க உள்ளூர் மட்டுமல்லாது கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்க ஆர்வம் காட்டினர். ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போகும் நிலையில் இன்று ரூ.20க்கு விலை போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் மீன்கள் கிடைத்தது. அது அதிக விலைக்கு விற்பனையானது இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















