மேலும் அறிய

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

சிக்கல் சிங்கார வேலர் கோவிலில், அன்னையிடம் இருந்து வேல் வாங்கிய பிறகு, முருகப் பெருமானின் விக்ரஹத்தில் கோபத்தில் உக்கிரத்தால் வியர்த்துக் கொட்டும் அதிசயம் நடக்கும் நாள் இன்று தான்.

முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும், புராண கதைப்படி திருச்செந்தூரே யுத்தம் நிகழ்ந்த தலம். இதனால் ஜெயந்திபுரம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்களில் சஷ்டி விரதம் இருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கோவில் வளாகங்களில் அலைகடலென பக்தர்கள் குவிந்துள்ளனர்கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது.

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலை பூஜைகள் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைவார்.பின்னர் சுவாமி, அம்மன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபம் வந்து சேருகின்றனர். அங்கு உபதயாதரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு  சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருள்கிறார். கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார விழா நடக்கிறது. 

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் சேர்ந்த கிரி பிரகாரம் சுற்றி கோயிலை சேருகின்றனர். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது.சூரசம்ஹார விழா முடிந்ததும விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

Kandha Shasti Festival : நாளை சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்..! பலத்த பாதுகாப்பு...

நாளை மறுநாள் 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும். கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் வருகை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நாளைய தினம் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget