மேலும் அறிய

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

ஆய்வில் கிடைத்த உலோகப் பொருட்களிலும் டின் எனப்படும் வெள்ளீயம் உலோகப் பொருள் 6 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. டின் எனப்படும் உலோகம் தற்போது கண்ணாடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சந்நல்லூர்தான் எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு முதன்முதலாக கடந்த 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகே, அகழாய்வுப் பகுதியாக அடையாளம் காணப்பட்ட பகுதியைச் சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. தமிழகத் தொல்லியல்துறையின் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் அகழாய்வு பணியில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

இந்த நிலையில் அகழாய்வு பணியில் கிடைத்த உலோகப்பொருட்களை ஆய்வு செய்வதற்காக பெங்களூரில் உள்ள நியாஸ் எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உலோக தொல்லியல் ஆய்வாளரும் தொல்லியல் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாரதா ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வுக்குழுவினர் உலோகப்பொருட்களை ஆய்வு மேற்கொண்டனர். 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

இதற்காக எக்ஸ்ஆர்எப் எனப்படும் உலோகப்பொருட்களை பிரித்துப்பார்க்கும் கதிரியக்க கருவி மூலம் உலோக பொருட்களை ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில் கடந்த மாதம் அகழாய்வு பணியில் கிடைத்த தங்க நெற்றிப்பட்டயம் மிக தூய தங்கம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வில் கிடைத்த அனைத்து உலோகப்பொருட்களிலும் டின் எனப்படும் வெள்ளீயம் உலோகப் பொருள் 6 முதல் 50 சதவீதம் வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆய்வாளர் எத்திஸ்குமார், ஆய்வு மாணவர் அருண் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். இந்த டின் எனப்படும் உலோகம் தற்போது கண்ணாடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த நெற்றிப்பட்டம் தூய தங்கம் - ஆய்வில் தகவல்

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் ரயில்சேவை மாபெரும் வளர்ச்சிப் பணிகள்: பயணிகள் மகிழ்ச்சி !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget