மேலும் அறிய

’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு

’’இன்றைக்கு சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், பேசுகிறார்களே தவிர அதை செய்வதில்லை’’

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டம், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாகவி பாரதியார் குறித்த புகைப்பட கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நூல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழிய பாரத மணித்திரு நாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார்.

                            ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, பாரதியார் பிறந்த மண்ணில் நிற்பதை நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது. அவரது ஒவ்வொரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால் அவரால் எப்படி இவ்வாறு பாட முடிந்தது என்று தான் தோன்றுகிறது. ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர். அதற்காக தன்மானத்தை விட்டு, எங்காவது ஏதாவது உழைக்கிறேன் என்றில்லாமல், தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை கூட எழுதி இந்த நாட்டுக்கு ஒரு உணர்ச்சி உண்டாக்க வேண்டும். மக்களை எழுப்ப வேண்டும் என முயற்சி பண்ணினார்.

                           ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
                                                                                        (bharathiyar honour)
அந்த காலத்தில் பெண்களுக்கென தனி பத்திரிகை நடத்தியவர். அவரை ஏராளமானோர் கிண்டல் செய்தனர். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. தனது மனைவியை அழைத்துச்செல்லும் போது, அவரது தோளில் கைவைத்து, தோழனுடன் நடப்பது போல் நடப்பார். இன்றைக்கு சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், பேசுகிறார்களே தவிர அதை செய்வதில்லை. அவரது வார்த்தைகள் சக்தி என்றால், அவருக்கு உள்ளே இருந்தது வைரம் மாதிரியான பலம். ஏழ்மை, ஏளனம் என்னை தாக்காது. மற்றவர்களின் ஏளனத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. நீ சொல்வதை சொல். எனது வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னை தாக்கும் என்றார். அவரது பாடல்களை இன்றைக்கு நாம் பாடினாலும் உணர்ச்சி எழும்பும். நாட்டு பற்றி இப்பேர்பட்ட பாடலை பாடியுள்ளாரே, அதுவும் சக்தி வாய்ந்த மொழி தமிழில் பாடியுள்ளார். 
 
பாரதியார் ஆன்மீகத்தில் திளைத்தவர். பராசக்தி என்று பேசுவார். ஆனால், கிருஷ்ணனை பற்றிய எண்ணம் வந்தவுடன், கண்ணனை தந்தை, தாய் என எல்லாவிதத்திலும் பார்த்து அனுபவித்த மாதிரி பாடல்களை பாடினார். 38 வயது தான் வாழ்ந்தார். ஆனால், அதற்குள் அவரது உடம்புக்குள் உள்ள எரிமலையை என்ன விதங்களிலும் எடுத்து கூறினார் என்று பார்த்தால், ஒவ்வொரு கவிதையும் ரத்தினங்களாக மின்னுகிறது. இந்த நாடு அவருக்கு என்ன கொடுத்தது. 

                                    ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
                                                                              (bharathiyar house)
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் இன்னும் நிறைய பண்ணலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.  இங்கே 1947 இல் ஒரு மணிமண்டபம் அமைத்து, பாரதியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அதனை வங்காளத்தின் ஆளுநராக இருந்த மூதறிஞர் ராஜாஜி திறந்து வைத்தார். அதன் பின்னர் இந்த மணிமண்டபம் திறக்கின்ற வரைக்கு என்ன நடந்தது என்று நமக்கு தெரியாது. அப்போது இருந்த மணிமண்டபம் என்னாச்சு என்றும் தெரியவில்லை. கல்கி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர், எட்டயபுரத்தை சேர்ந்த மக்கள், மதுரை சேதுபதி பள்ளி மாணவர்கள் பணம் கொடுத்து, மணிமண்டபத்தை கட்ட வேண்டும் என கூறினர். மூதறிஞர் ராஜாஜியே வந்து கட்டிக்கொடுத்துள்ளார். அப்போதே அந்த முயற்சி நடந்துள்ளது. ராஜாஜியை எட்டயபுரம் மக்கள் மறந்துவிடவில்லை. 
 
அதன்பின்னர் கூட பாரதியார் பற்றி தேசிய அளவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என ஏராளமானோர் முயற்சி எடுத்துள்ளனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காசி விஸ்வவித்யாலயம் பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு ஒரு இருக்கை அமைத்துள்ளார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், காசிக்கு போய் சமஸ்கிரதம், இந்தி, ஆங்கிலம் என அனைத்தையும் கற்று வந்து, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போன்று இனிதாவது எதுவுமில்லை என கவிதை இயற்றினார். அதனால் தமிழுக்கு ஒன்றும் நஷ்டமாகவில்லை. அதன் பின்னர் அமுதாமான கவிதைகளை இயற்றி கொடுத்துள்ளார். தமிழை வளர்க்க வேண்டும். அதில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து, அதற்கு சுப்பிரமணிய பாரதியார் பெயரை சூட்டி  நேற்று பிரதமர் அறிவித்துள்ளார். பாரதியார் புகழை எட்டயபுரம் மக்கள் காப்பாற்றி வருகின்றனர். தேசிய அளவில் பிரதமரே திரும்ப திரும்ப பாரதியார் குறித்து பேசி வருகிறார். பாரதியாரின் புகழ் உலகளவில் உள்ளது. இன்னும் இந்த மணிமண்டபத்தை சிறப்பாக வைக்கலாம். அங்குள்ள பொருட்களை இன்னும் அழகாக வைத்து காண்பிக்கலாம். நாடு முழுவதும் பாரதி பற்றி எடுத்துச்சொல்வோம். 
 
பள்ளிகளில் உள்ள சின்னசிறு பிள்ளைகளுக்கு பாரதியாரின் பாடல்களை கற்றுக்கொடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த 100 ஆவது ஆண்டு நினைவு முன்னிட்டு, நமது பிள்ளைகளுக்கு பாரதியின் கவிதைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது. பாரதியாரின் பாடல்கள் போட்டிகள் வைத்து, பரிசுகள் வழங்குங்கள். பாரதியை பாடுவது மூலமாக நாட்டுப்பற்று வளரும். அவர் அனுபவித்து கஷ்டங்கள் போல் யாரும் அனுபவித்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த நாடு என்ன செய்தது என்று கேட்டாமல், நாடு நல்லாயிருக்க வேண்டும். பாரத தாய் ஒரு தாய் தான். ஆனால் அவர் பல மொழிகளில் பேசுவாள் என்றளவுக்கு பாரத தாயை அனுபவித்து பாடியுள்ளார், அதனால் பாரதியை மறக்க கூடாது. அவர் எட்டயபுரத்து சொத்து. அந்த சொத்து பகிர்ந்து கொடுக்கும் போது அது வளரும், என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Embed widget