மேலும் அறிய

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

ஒரு கிலோ காய்கறி ஆயிரம் ரூபா'! 'அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை'! மேலும் 15 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர்

5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 15 இலங்கை தமிழர்கள் நேற்று தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் இருந்து நேற்றுமுன் தினம்  இரவு படகுகளில் புறப்பட்ட அவர்கள் நேற்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். அங்கு சென்று கடல் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த 15 பேரையும் மீட்டனர். பின்பு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.மீட்கப்பட்ட 15 பேரில் 4 பேர் குழந்தைகள் ஆவர். அவர்களைத்தவிர 11 பேரிடமும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மட்டுமின்றி மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

உணவு பஞ்சத்தால் இலங்கை தமிழர்கள் நேற்று  15 பேர்  அகதிகளாக தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் தண்ணீர் உணவு இன்றி குழந்தைகளுடன் அவதிப்பட்ட தகவலறிந்த  மெரைன் போலீசார் மீட்டு வந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதி, மற்றும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம்  காரணமாக,  3 சிறுவர்கள் உட்பட   15 இலங்கை தமிழர்கள் அகதிகளாக பைப்பர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே வந்தடைந்துள்ளனர். 

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

இவர்கள், இலங்கை யாழ்ப்பாணம் காக்கைதீவு பகுதியை சேர்ந்த பழனியாண்டி (75), அவரது சகோதரி ஜானகி (63), சதீஷ்குமார்(29), அவரது மனைவி விதுரா(24), மகன் சபரீசன்(3), ஒன்பது மாத குழந்தை சரண்யா, ஜெயராம் (22), அவரது மனைவி பேபிசாலினி(20), மகள் கேசனா, கதிரமலை(72), அவரது சகோதரர் ஜோகன் (73), ஜோகனின் மனைவி மாலா(72), நிரோஜன் (28), அவரது மனைவி வைதீஸ் வரி(20), மகன் குரிசன் ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களை மீட்ட கடலோர காவல் குழுமம் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்தில் கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், தாங்கள் இலங்கை  நெடுந்தீவு கடற்கரையில் இருந்து  ஞாயிற்றுக்கிழமை படகில் ஏறியதாகவும், திங்கட்கிழமை  அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாக   தெரிவித்தனர். மேலும், தற்போது , இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

ஒரு கிலோ காய்கறி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால், எப்படி வாங்கி சாப்பிட முடியும்? மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு, அனைவரும் உயிரிழக்க நேரிடும். ஆனால், இந்தியாவுக்கு சென்றால்   உணவு தட்டுப்பாடின்றி  வாழலாம் என்ற நம்பிக்கையில், உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த காரணத்தை  சோகத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பேபி ஷாலினி(வயது 22) கூறியபோது:- இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். அரிசி ஒரு கிலோ 300 ரூபாய், சீனி 300 ரூபாய், காய்கறிகள் 300 லிருந்து 500 வரை, பருப்பு 300 ரூபாய் குழந்தைகளுக்கான பால் பவுடர் என அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாகவே உள்ளது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குழந்தையுடன் தவித்து வந்தோம். உயிர் வாழ்வதற்காகவே நகையை விற்று படகு மூலம் இங்கு வந்துள்ளோம் .இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

மற்றொரு  பெண் விதுரா(24) கூறுகையில்:- இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. 2 குழந்தையுடன் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தோம். குழந்தைகளை காப்பாற்றி உயிருடன வாழவே குழந்தையின் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க நகையை விற்று அந்த பணத்தை படகோட்டிக்கு கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிரோசன்(24) கூறும்போது, இலங்கையில் தற்போது உள்ள பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் அங்கு வாழவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய், அரிசி 300 ரூபாய், காய்கறிகள் கிலோ 500 ரூபாய், பிரட் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் ரூ.100 என அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. அங்கு வேலை வாய்ப்பும் இல்லாததால் குழந்தையுடன் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வந்தோம். அதனால் தான் மனைவி, குழந்தையுடன் இங்கு வந்துள்ளோம் என்றார்.

இலங்கையில் தொடரும் பொருளாதார சிக்கல்.! தமிழகத்திற்கு படையெடுக்கும் ஈழத்தமிழர்கள்.!

உணவு பஞ்சத்தால், இலங்கை யிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு  வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இதுவரை இலங்கையில் இருந்து 16 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் வந்திருந்த  நிலையில், நேற்று மட்டும்  15 பேர்  வந்ததையடுத்து, இதுவரை மொத்தம்  75 பேர் தஞ்சமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget