மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரத்தில் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் குற்றவாளிகள் - ஹென்றி திபென்

அம்பை காவல் சரகத்தில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவு போலீசாரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். புலனாய்வு பிரிவு போலீசார் தமிழக முதலமைச்சரை தவறுதலாக வழி நடத்துகிறார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை சித்திரவதைக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த கூட்டமைப்பினர் பல்வேறு ஆய்வுகளை சம்பவம் நடைபெற்ற இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முதற்கட்ட அறிக்கையை தயார் செய்துள்ளனர். இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போலீசார் மீது கூறப்படும் புகார்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான போலீஸ் புகார் ஆணையத்தின் தலைவராக உள்ளவர் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆனால் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பல் பிடுங்கப்பட்டு பலர் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்துள்ள நிலையில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை பழைய சட்டம் ஆகும். 2013 ஆம் ஆண்டிற்கு பின் அந்த நடைமுறையை திருத்தி புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை அமலில் இருக்கும் போது மாவட்ட ஆட்சியர் ஏன் இந்த வழக்கை விசாரிக்காமல் உட்கோட்ட நடுவரான சார் ஆட்சியரை வைத்து விசாரித்து வருகிறார் என்பதே கேள்வியாக உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு மற்றும் தமிழக அரசு ஆணை ஆகியவையில் தெளிவாக பல்வேறு தகவல்கள் காவல் நிலையங்கள் தொடர்பாக சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அனைத்து அறைகளிலும் வைக்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறதா? முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுவிற்கு தலைவராக உள்ளவர் மாவட்ட ஆட்சியர்.. இதற்கு உறுப்பினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்து செயல்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் ஆட்சியர் என்ற முறையிலும், மேற்பார்வை குழுவுக்கு தலைவர் என்ற முறையிலும் காவல் நிலையங்களில் உள்ள கேமரா சரியாக செயல்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்திருக்க வேண்டும். அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தான் உடனடியாக விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும். காவல் நிலைய கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் கேட்டிருக்க வேண்டும்.. குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காக்கும் முயற்சியை தொடர்ந்து அதிகாரிகளால் நடந்து வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி காவல் நிலையத்தில் சட்டவிரோதமான சித்திரவதையை செய்துள்ளார். வீரப்பன் தேடுதல் வேட்டையை விட கொடூரமான சித்திரவதைகள் ஏ எஸ் பி ஆல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான மேற்பார்வை கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணையை தட்டிக் கழிக்க வேண்டும் என்ற நிலையிலே மாவட்ட அளவிலான மேற்பார்வை கமிட்டியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றவியல் நடுவருக்கும் பொறுப்பு உள்ளது. காவல்துறை கைது செய்யப்பட்டு நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்ய வரும்போது கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும். அம்பாசமுத்திரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து, மாரியப்பன் உட்பட்டவர்களிடம் மருத்துவ பரிசோதனை முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சேரன்மகாதேவி நீதித்துறை நடுவர் ஆய்வு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்பட்டவர்களிடமாவது அவர்கள் பேசியிருக்க வேண்டும். இரண்டையும் சேரன்மகாதேவி நீதித்துறை நடுவர் செய்யவில்லை. முறையாக சேரன்மகாதேவி மேஜிஸ்திரேட் இந்த விவகாரத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி இருந்தால் இந்த விவகாரம் முதலிலேயே தெரிய வந்திருக்கும். நெல்லை மாவட்டத்தில் எஸ்பிசிஐடி முறையாக வேலை செய்யவில்லை. அம்பாசமுத்திரம் விவகாரத்தில் எஸ்பி சம்பவம் குறித்து எதுவுமே தெரியவில்லை என சொல்கிறார். அம்பை விவகாரத்தில் புலன்வாய்த்துறை  தோல்வியடைந்துள்ளது. அம்பை காவல் சரகத்தில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவு போலீசாரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். புலனாய்வு பிரிவு போலீசார் தமிழக முதலமைச்சரை தவறுதலாக வழி நடத்துகிறார்கள். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கேட்டு கடந்த 26 ஆம் தேதி மனு செய்துள்ளோம். 48 மணி நேரத்தில் வேண்டும் என கேட்டு உள்ளோம். சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அந்த மனுவில் மாவட்ட அளவிலான மேற்பார்வை கமிட்டியின் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியர், உறுப்பினராக இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியவரையும் குற்றம் சாட்டி மனுவில் சேர்க்க உள்ளோம். அம்பை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் குற்றவாளிகள். இந்த விவகாரத்தில் இதுவரை காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை” என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget