மேலும் அறிய
Advertisement
நாகர்கோவில்: டீ கடை சிலிண்டர் விபத்து: காயம் அடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது
தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேனீர் கடையில் நடைபெற்ற தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கு தல ஐம்பதாயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கபட்ட நிலையில் அந்த தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் அடி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர் சபீக்(37). இவரது டீ கடை இரவு முழுவதும் செயல்படும். இந்நிலையில் நேற்று விடியற்காலையில் கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்த போது, கடையிலுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. சுதாகரித்து கொண்ட டீ மாஸ்டர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியுள்ளர். இந்நிலையில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் வேடிக்கை பார்க்க வந்தவர் ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு துறையினர் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்துள்ளது. அதனை அணைக்காமல் டீக்கடை இயங்கி வந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிலிண்டர் வெடி விபத்தில் தேநீர் கடையில் வேலை பார்த்து வந்த மூசா 48, பிரவீன் 25 , சேகர் 52 மற்றும் தேநீர் அருந்த வந்த சுப்பையன் 66 , சுதா43 , சந்திரன் 62, சுசீலா உட்பட எட்டு பேருக்கு தல ஐம்பதாயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதல்வர் அதிகரித்த உதவி தொகை காண காசோலை வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion