மேலும் அறிய

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 600 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி - விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

இதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கிள்ளிகுளம் வேளாண் ஆராய்ச்சி கல்லூரி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து விவசாய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளது. பனைமரங்கள் நிறைய பயன்தரக்கூடியவை. மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குட்டை வகை பனைமரங்கள் கொண்டு வரப்பட்டு கிள்ளிகுளம் வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த குட்டை வகை பனைமரங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள 8 கோடி பனைமரங்களில் 5 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. அதிலும் 2 கோடி பனைமரங்கள் தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளன. பதநீரை ஒரு மாதம் அளவுக்கு சேமித்து சந்தைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் இங்கு செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொள்ள உதவும்.

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நடைபெறும் கண்காட்சியில் மாப்பிள்ளை சம்பா, கவுணி அரிசி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அற்புதமான சக்தி கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை இவ்வகையான நெல் ரகங்களை பயிரிட வைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 600 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள் நெல் பயிரிடும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மூலமாக புதிதாக பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் அனைத்து வகையான விவசாயமும் செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் 1.60 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள், வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றுப்பாசனம் மூலம் 46,000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 4 வரத்து கால்வாய்கள், 52 தடுப்பணைகள், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகள் உள்ளன. சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. 21 கடலோர கிராமங்களில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன. 

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நெல் மட்டுமல்லாமல் அனைத்து பயிர்களிலும் பாரம்பரிய ரகங்களை அழியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இயற்கையாகவே பாரம்பரிய ரகங்களில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள், கூடுதலாக உரங்கள் தேவையில்லை. நமது சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. பாரம்பரிய ரகங்களை சந்தைப்படுத்தினால் அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள். எனவே விவசாயிகள் பாரம்பரிய ரகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

வல்லநாடு பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் 100 நாள் வேலை திட்டம் மூலம் காட்டுப்பன்றிகள் வசிக்கும் உடைமரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அடுத்த பருவத்தில் விவசாயத்திற்கு பன்றிகள் தொல்லை இருக்காது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் பழனிவேலாயுதம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடிமணி, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர்,கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உழவியல் துறை தலைவர் சோலைமலை, பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை, பயிர் மரபியல் துறை தலைவர் ரிச்சர்டு கென்னடி, வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Embed widget