மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வெளிநாட்டு சிறுவன் - பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைப்பு
ரஷ்ய நாட்டை சேர்ந்த வாசுதேவ ஜார்வினன்-அலெக்ஸான்ட்ரா ஜார்வினன் தம்பதியர் என்பதும் அவர்கள் சுமார் 14 வருடங்களாக உத்திரபிரதேசத்தில் வசித்து வருகின்றனர்
கன்னியாகுமரி என்பது ஒரு சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது இங்கு ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா வருவதுண்டு இந்நிலையில் கடற்கரையில் 13 வயது மதிக்கதக்க வெளிநாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவர் சுற்றி கொண்டிருந்தார். அவரிடம் ரோந்து பணியில் இருந்த முதல் நிலை பெண் காவலர் கலைசெல்வி விசாரணை செய்த போது அவருடைய பெயர் மீலமாதவா என்பதும் உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து வருவதாகவும் குடும்பத்தினர் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை செய்த போது உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கோபர்தன் என்ற காவல்நிலையத்தில் சிறுவன் காணமால் போனதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருடைய பெற்றோர் ரஷ்ய நாட்டை சேர்ந்த வாசுதேவ ஜார்வினன்-அலெக்ஸான்ட்ரா ஜார்வினன் தம்பதியர் என்பதும் அவர்கள் சுமார் 14 வருடங்களாக உத்திரபிரதேசத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உத்திரபிரதேச காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறுவனின் தந்தை மற்றும் போலீசார் குமரி மாவட்டம் வந்தனர். இதனை தொடர்ந்து சிறுவனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் கோட்டார் காவல் நிலையத்தில் வைத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உத்திரபிரதேச போலீசாரிடம் சிறுவனை ஒப்படைத்தார். மேலும் அவரை மீட்க உதவிய காவலர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion