மேலும் அறிய

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - உப்பள தொழிலாளர்கள் வேதனை

கோடை மழை, வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள அதே நேரத்தில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் கவலை. இது தான் இயற்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையால் உருக்குலைந்து போன உப்பங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியை தொடங்கும் வேளையில் பெய்த இந்த திடீர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - உப்பள தொழிலாளர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி இரண்டாம் இடம் வகிக்கிறது. உப்பு உற்பத்தி தொழிலில் உப்பளங்களை செம்மைப்படுத்துதல், பாத்தி மிதித்தல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் செய்தல், லாரிகளில் ஏற்றுதல், உப்பு பாக்கெட் போடுதல், அயோடின் சேர்த்தல் என உப்பு சார்ந்த தொழிலில் சுமார் 30 ஆயிரம் ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - உப்பள தொழிலாளர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.இந்நிலையில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களை உருக்குலைத்தது. அனைத்து உப்பளங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மழையால் உருக்குலைந்த உப்பளங்களை சீரமைக்கும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 15-ம் தேதிக்கு மேல் தான் தொடங்கினர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தவே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - உப்பள தொழிலாளர்கள் வேதனை

சில உப்பளங்களில் ஏப்ரல் மாத கடைசியில் உப்பு உற்பத்தி தொடங்கியது. அதுவும் தரமான உப்பு உற்பத்தி இன்னும் வரவில்லை. பழுப்பு நிறத்தில் தான் உப்பு வருகிறது. தூய்மையான வெள்ளை நிற உப்பு இன்னும் வரவில்லை. இந்த வாரத்தில் தான் உப்பு உற்பத்தி முழுமையாக தொடங்குவதற்கான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது பெய்த மழை அதனை மேலும் தாமதபடுத்திவிட்டது.

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு - உப்பள தொழிலாளர்கள் வேதனை

இதுகுறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையால் இந்த ஆண்டு ஏற்கனவே உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் தாமதம். இந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் 10 நாட்களில் உப்பு உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் உப்பு உற்பத்தி மேலும் தாமதமாகும். இந்த ஆண்டு 50 சதவீதம் அளவுக்கு தான் உப்பு உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்களிடம் உப்பு கையிருப்பு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் உப்பு டன்னுக்கு ரூ.4000 வரை விலை போகிறது. நல்ல விலை கிடைத்தாலும் உப்பு கையிருப்பு இல்லை என்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: நாளை மறுநாள் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா? விவரம் இதோ!
தூத்துக்குடி: நாளை மறுநாள் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா? விவரம் இதோ!
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
VOC Port: தூத்துக்குடிக்கு ரூ.17,000 கோடியில் மெகா ப்ராஜெக்ட்..! இரண்டாக உடைத்த மத்திய அரசு - டெண்டர் வருமா?
தூத்துக்குடிக்கு ரூ.17,000 கோடியில் மெகா ப்ராஜெக்ட்..! இரண்டாக உடைத்த மத்திய அரசு - டெண்டர் வருமா?
Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?
Thiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோவிலில் நடந்த அதிர்ச்சி.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்.. நடந்தது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி

Embed widget