திடீர் கொத்துக்கொத்தாக கீழே விழுந்த காகங்கள்; காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் - கடைசியில் நேர்ந்த சோகம்
அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உயிரிழந்த காகங்களை பாடை கட்டி ஏற்றி பாலூற்றி நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்ததினர்.
திருச்செந்தூர் அருகே மர்மமான முறையில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழே விழுந்து உயிருக்கு போராடிய காகங்களை மீட்டு இளைஞர்கள் உயிர்கொடுக்க போராடிய மனிதநேய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் வானத்தில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கொத்துக்கொத்தாக கீழே விழுந்தது. ஒரே நேரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் கீழே விழுந்து உயிருக்கு போராடியது.
இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உயிருக்கு போராடிய காகங்களை மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் கீழே விழுந்த காகங்கள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உயிரிழந்த காகங்களை பாடை கட்டி ஏற்றி பாலூற்றி நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்ததினர்.
இளைஞர்களின் இந்த மனிதநேயல் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பறவைக்காய்ச்சலால் ஏராளமான காகங்கள் உயிரிழந்து ஆய்வில் தெரியவந்தது. இதனால் இந்தப்பகுதியிலும் கொத்துக்கொத்தாக காகங்கள் உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.