Thoothukudi Election Results 2024: போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு- மீண்டும் வாகை சூடிய கனிமொழி கருணாநிதி!
Thoothukudi Lok Sabha Election Results 2024: தூத்துக்குடி தொகுதியானது ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டபிடாரம், விளாத்திகுளம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது.
தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வின் கனிமொழி கருணாநிதி 5,40,729 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். கனிமொழி 5,18,816 வாக்குகள் மொத்தமாகப் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட, 3,75,975 வாக்குகள் அதிகம் பெற்று அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தூத்துக்குடி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கனிமொழி முன்னிலை பெற்றார். இதனை தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 2 மணி நிலவரப்படி கனிமொழி (திமுக) 2,89,925 வாக்குகளும், சிவசாமி வேலுமணி (அதிமுக) 88,114 வாக்குகளும், ரோவனா ருத் ஜான் (நாம் தமிழர் கட்சி) 69,072 வாக்குகளும், விஜயசீலன் (தமாகா) 64,627 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொகுதி ஓர் பார்வை
தென்மாவட்டத்தின் மிக முக்கிய ஊரான தூத்துக்குடி, சென்னைக்கு அடுத்து 4 வகையான போக்குவரத்தையும் தன்னகத்தே கொண்டது. பல சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட இந்த தூத்துக்குடியில் மக்களவை தொகுதி 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக திருச்செந்தூர் தொகுதியாக இருந்தது.
இந்த தொகுதியானது ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டபிடாரம், விளாத்திகுளம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியாகும்.
வாக்களித்தவர்கள் நிலவரம்
தூத்துக்குடி தொகுதியில் 7,13,388 ஆண் வாக்காளர்களும், 7,44,826 பெண் வாக்காளர்களும், 216 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்களர்களும், 87 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர். மொத்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் 66.88 என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள்
3 மக்களவை தேர்தலை இதுவரை சந்தித்துள்ள தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றது. இதில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்ட நிலையில் கனிமொழி வென்றார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.ஜெயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினோ ரூத் ஜென் ஆகியோர் முக்கிய வேட்பாளராக களம் கண்டுள்ளனர்.
Also Read: Tamil Nadu Lok Sabha Election Results 2024 LIVE Updates | தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள்