TN Lok Sabha Election Results LIVE: எனக்கு என் உயரம் தெரியும் - கலைஞர் கருணாநிதி பாணியில் முதல்வர் ஸ்டாலின்
Tamil Nadu Lok Sabha Election Results 2024 LIVE: உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிய இங்கே இணைந்திருங்கள்.
LIVE
Background
உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய நாட்டின் ஜனநாயகத் திருவிழா முடிவுகள் இன்று (ஜூன் 4) வெளியாகி வருகின்றன. முன்னதாக, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என 40 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.
எங்கெங்கு எவ்வளவு வாக்குப் பதிவு?
அரக்கோணம் தொகுதியில் 74.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆரணி மக்களவைத் தொகுதியில் 75.76 சதவீதமும் வட சென்னையில் 60.11 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சிதம்பரம் தொகுதியில் 76.37 சதவீதமும் கோயம்புத்தூரில் 64.89 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. அதேபோல கடலூர் - 72.57, தர்மபுரி - 81.20, திண்டுக்கல் - 71.14, ஈரோடு - 70.59 சதவீத வாக்குகளை மக்கள் செலுத்தி இருந்தனர்.
மத்திய சென்னை மிகவும் மோசம்
மத்திய சென்னை தொகுதியில் மிகவும் குறைவாக 53.96 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. தென் சென்னையில் 54.17 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் 79.21%, காஞ்சிபுரத்தில் 71.68%, கன்னியாகுமரியில் 65.44, கரூரில் 78.70, கிருஷ்ணகிரியில் 71.50, மதுரையில் 62.04 சதவீத வாக்குகள் பதிவாகின.
மயிலாடுதுறையில் 70.09, நாகப்பட்டினத்தில் 71.94, நாமக்கல்லில் 78.21, நீலகிரியில் 70.95 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல பெரம்பலூரில் 77.43, பொள்ளாச்சியில் 70.41, ராமநாதபுரத்தில் 68.19, சேலத்தில் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்குப் பதிவு விவரம்
சிவகங்கையில் 64.26 சதவீத வாக்குகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.25 சதவீத வாக்குகளும் தென்காசி தொகுதியில் 67.65 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. தஞ்சாவூர் தொகுதியில் 68.27 % வாக்குகளும் தேனி தொகுதியில் 69.84 % வாக்குகளும் தூத்துக்குடி தொகுதியில் 66.88 சதவீதமும் பதிவு செய்யப்பட்டதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் 67.51 சதவீதமும் திருநெல்வேலியில் 64.10 சதவீதமும் திருப்பூர் தொகுதியில் 70.62 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திருவள்ளூரில் 68.59 சதவீதமும் திருவண்ணாமலையில் 74.24 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் 73.53 சதவீத வாக்குகளும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 76.52 சதவீதம், விருதுநகரில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து உடனுக்குடன் இந்த நேரலையில் காணலாம்.
சொன்னதை செய்து மக்களுக்காக உழைப்போம் - பவன் கல்யாண்
#WATCH | Amravati, Andhra Pradesh: Jana Sena Party chief Pawan Kalyan says, "...I'm glad people stood by us...I feel very accountable and responsible for the mandate...It feels good to see such a thumping majority for our alliance...we will work towards whatever we have… pic.twitter.com/bHgmxpoHJm
— ANI (@ANI) June 4, 2024
ஹைதராபாத் மக்கள் மதவாத பாஜகவை நிராகரித்திருக்கிறார்கள் - அசாதுதீன் ஒவைசி
#WATCH | Telangana: AIMIM chief and candidate from Hyderabad Lok Sabha seat, Asaduddin Owaisi says, "The campaign of BJP here promoted communalism. That's why the people of Hyderabad rejected such efforts... The BJP government has existed for the last 10 years... The people were… pic.twitter.com/26sPxBjQ4H
— ANI (@ANI) June 4, 2024
எல்லா போரும் வெற்றிக்கானது அல்ல.. சில போர்கள் நம் இருப்பை சொல்வதற்கானது - ராதிகா சரத்குமார்
View this post on Instagram
2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் - எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அடைந்திருந்தாலும் , 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
என் உயரம் எனக்குத் தெரியும் - கலைஞர் கருணாநிதி ஸ்டைலில் பதில் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
என் உயரம் எனக்குத் தெரியும் - பிரதமராக வாய்ப்பிருக்கா என்னும் கேள்விக்கு கலைஞர் கருணாநிதி ஸ்டைலில் பதில் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்